பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雲75 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை புகழேக்திப் புலவர் சென்று, அவ்வூடல் திரக் கூறியதையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். புலவி காமச் சிறப்பைப் பயக்கவல்லதாயினும், அது சிறிது நீளிலும் அதன் சுவை கைக்கும் என்பதை இல்லறத்தில் ஒழுகுவார் கன்கு அறிவர். உப்பமைங் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.38 என்ற வள்ளுவர் கூற்றை அறிக. உப்பு மிக்கவழித் துய்ப்பது சுவை பன்றானாற்போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்பமின்றாம்" என்ற பரிமேலழகர் உரையையும் எண்ணி மகிழ்க. எனவே, தொல் காப்பியர் இப்புலவியின் இறுதியில் தலைவனை அன்போடும் இடித்துக் கூறி, அவனைத் தழுவுதலே தலைவிக்கு முறையாகும் என்று கூறுவர். தாய்போல் கழறித் தழிஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப கவஇொடு மயங்கிய காலை யான*9 - (கவவு - முயக்கம்) என்பது விதி. மிக்க சீற்றத்தினும் தலைவி தன்னைப் புகழ்த்து கொள்ளுதல் முறையன்று; எனினும், அவனுடைய காமக்கிழத்தி பரிடத்துத் தான் கடந்தொழுகும் மரியாதைபற்றியும்: தலைவனது பரத்தமை கருதாது தான் கூடியொழுகுதல் பற்றியும் தலைவி குறிப்பால் தன்னை வியந்துகொள்ளுதல் கூடும். தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல் எத்திறத் தானும் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த இரண்டலங் கடையே.* என்பது தொல்காப்பிய விதி. தலைவன் பரத்தையிற்பிரிக் து கரக்தொழுகுதல் தன் ஊரின் கண்ணேயல்லது வேற்று காட்டு ஊர்களில் ஆகாதெனக் கூறும் இறையனார் களவியல். - 38. குறள் - 1302. 39. கற்பியல் - நூற். 32. 40. கற்பியல்-நூற் 39.