பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவொழுக்கம் f 7 G செவ்வணி பணித்து சேடியை விடுப்புழி அவ்வணி புழையர்கண் டழுங்கிக் கூறலும்: என்று கூறும். இங்ஙனமே, பரத்தைப் பிரிவில் தலைவிக்குப் புதல்வன் பிறந்த செய்தி யறிவித்தற்கு அவர் வெள்ளணியணிக்து செல்வதும் பண்டைய வழக்கமாக இருந்தது.: மேற்கூறியவாறு அறிவிக்கப்பெற்ற தலைவியின் பூப்புச் செப்தி கேட்டதும் தலைவன் காலம் தாழ்த்தாது சென்று, அது நிகழும் மூன்று நாளும் அவளை அணுகியிருக்க வேண்டும் என்றும், நான்காம் நாள் முதல் பன்னிரண்டு நாள் வரை அவளை அவன் கூடியுறைய வேண்டும் என்றும் கூறுவர். இதனை, பூப்பின் புறப்பா டிராது நாளும் நீத்தகன் துறையார் என் மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான. * என்ற நூற்பாவால் அறியலாம். இதில் பூப்பின் புறப்பா டீராறு: நாளும்’ என்பதற்குப் பூப்பு கிகழும் மூன்று நாளுக்கும் புறம்பாகிய பன்னிரண்டு காள்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மேலும் அவர், பூப்புப் புறப்பட்ட ஞான்றும் மற்றை காளும் கருத் தங்கில் அது வயிற்றில் அழிதலும், மூன்தாம் காள் தங்கில் அது சில்வாழ்க்கைத்தாகலும்பற்றி முக்காளும் கூட்டமின்றென்றார். கூட்டமின்தியும் நீங்காதிருத்தலிற் பரத்தையிற் பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக் கொண்ட வருத்தம் அகலும். அகல, வாய்க்கும் கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகப்பேற்றுக் காலத்திற்குரிய சிலைமை கூறிற்று” என்று கூறுவர். இறையனார் களவியலில் வருகின்ற இதேயடிக்கு அதன் உரையாசிரியர், பூப்புப் புறப்பட்ட நாள் முதல் பன்னிரு நாளும்" என்று பொருள் கூறுவர். மேலும் அவர் கூறுவன: "தலைவன் இவ்வகையாற் பூப்பு உணர்ந்து வாயில்களோடுஞ் சென்று தலைமகளிடத்தானாப் முங்காளுஞ் சொற் கேட்கும் வழி உறைவானாவது, உறைந்த பின்னை ஒன்பது காளும் கூடி உறைவானாவது. முக்காளும் சொற்கேட்கும் வழி உறைதற்குக் காரணம் என்னையேனின், தலைமகன் பரத்தையர் மாட்டானாக, முன்னின்ற பொறாமை உண்டன்றே, அது முக்காளுஞ் சொற்கேட்கும் வழி உறையன்ே ங்ேகும். நீங்கிய பின்னைக் கூட்டமாகவே கரு கின்றது மாட்சிமைப் 53. நூற்பா - 205. 54. స్క్రః - 206, 55. கற்பியல் - நூற் 45 இளம்}