பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் - 1977 உவமைதான் எல்லா அணிகளிலும் எளிமையானது; ஏனைய அணிகட்குத் தாய் போன்றது. கவிஞன் தான் கூறவந்த ஒன்றற்கு விளக்கம் தரவேண்டியும், அப்பொருளினிடத்து உள்ளே அமைந்து கிடக்கும் ஒர் இயல்பையோ பல இயல்புகளையோ எடுத்துக் காட்ட வேண்டியும் உவமையைக் கையாளுகின்றான். இவ்வாறு சாதாரணக் கவிஞர்களிடம் சிறந்த கவிதைக் கருவியாக இலங்கும் உவமை கூறும் இயல்பு தமிழ்க் கவிஞர்களிடம்-சிறப்பாகச் சங்க காலத்துக் கவிஞர்களிடம்-சிறந்த முறையில் பண்பட்டுக் கிடந்தது. அக்தி இயல்பை அவர்கள் சிறந்த முறையில் வளர்த்து கயம் படக் கூறும் உள்ளுறை உவமங்களை அமைத்துப் பாடல்களை ஆக்கினர். உள்ளுறை அமைந்த பாடல்கள் சங்கத்தமிழின் இணையற்ற மணிகள். அவை பயில்வார் காவில் தேன் சுரக்கச் செய்து அவர் கட்குப் புலமை வளத்தையும் கல்கிக் கன்னித் தமிழின் எழிலைப் பாரெங்கும் காட்டும் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றன. இத்தகைய சங்கத் தமிழ்ப் பாடல்களைச் சுவையறிந்து படித்துப் பயன் பெறுவது இன்றைய தமிழ் மக்களின் கடமை. -