பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட புறப்பொருள் 213. என்றாலும், அவர்கள் முன் முயற்சிகளும் முன்னேற்பாடுகளும் இலராயொழிந்தமையின், தம் கருத்தினை கிறைவேற்றிக்கொள்ள இயலவில்லை. இதனையறிந்த அரசன் தனது மண்ணை விரும்பித் தன்னாட்டு ஆகவர்ந்த அப்புகைப்புலத்து அரசன்மேல் சினமிகுதி யுடையவனாய் அவன் தன்மீது படையெடுத்து வருவதற்கு முன்பே தான் அவனை வெல்லு தற்கேற்ற காலம், இடம், வலி முதலிய முன் னேற்பாடுகளால் தன்னை நன்கு வலுச்செய்துகொண்டு கொடும் போர் புரிதற்கு வஞ்சி குடிக் கறுத்தெழுவான். இஃது அவனது கடமையுமாகும். இக்கடமையினை உளத்துட்கொண்டு ஒழியாத மண்ணாசையுடைய பகைவேந்தனைப் பொருகளத்து அழித்தல் கருதி அவன் அஞ்சும்படி படையுடன் மேற்சேறல் வஞ்சித்திணை என வழங்கப்பெறும். இதற்கு, எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைசென்று அடல்குறித் தன்றே.8 என்று தொல்காப்பியர் விதி கூறுவர். இத்திணையைப் பதின் மூன்று துறைகளாக விரித்தும் உரைப்பர்.9 இத்தினைக்கு கச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் உளங்கொள்ளற்பாலது: *ஒருவன் மண்ணசையான் மேத்சென்றால் அவனும் அம்மண்னழி 'யாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சி வேந்தர் ஆவர் என்று: உணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின், காஞ்சி என்பது எப்பொருட்கும் கிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற பொருண்மைப் பெயராற் கூறலாகாமை உணர்க. ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற் புறத்து வருக்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சோமான் செல்வழித் தகடுரிடை அதிகமான் இருக் கதாம். இங்ங்னம் இருவரும் வஞ்சி வேக்தரெனவே மேற்கூறும் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாமென்றுனர்க’ என்பது அவர் உரை.38 உழிஞைத்திணை ஒர் அரசன் ஒரு நாட்டின் மீது படை யெடுத்துச் சென்றால், எதிர் கிற்கலாற்றாத அக்காட்டு வேந்தன் கோட்டைக் கதவுகளை யடைத்து அதனுள் பாதுகாப்பாக இருக்து கொள்வான். தண்டெடுத்துச் சென்ற வேந்தன் அம்மதிலை முற்றுகை இடுவான். படையெடுத்துச் சென்ற வேக்தன் பேராணை 8. புறத்திணை - நூற். 7 (கச்சி) 9. புறத்திணை - நூற். 8 (கச்சி.) 10. புறத்திணை - நூற். 7-இன் உரை.