பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 #8 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ஒழுக்கத்தையும் பல படியாகச் சிறப்பித்துக் கூறுதல் வாகைத் தினை என வழங்கப்பெறும். வாகை - வெற்றி. ஒவ்வொருவரும் தத்தமக்குரிய அறிவு, ஆண்மை, பெருமை முதலிய ஆற்றல் கூறு: பாடுகளை ஏனையோசினும் வேறுபட மிகுத்துக் கூறுதல் போர் வெற்றியுள் அடங்கும். தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப,21 என்று வாகைத்தினைக்கு விதி கூறுவர் ஆசிரியர் தோல்காப்பியர். அவரவர்க்குரிய துறையில் ஒப்புடைய பிறரோடு உறழ்ந்து மேம் படுதலும் தமக்குரிய துறையில் எதிர்ப்பின்றி இயல்பாக மேம்பட்டு விளங்குதலும் ஆகிய இருதிறமும் வாகைத்தினையேயாம், இவற்றுள் உறழ்ச்சி வகையால் பெற்ற வென்றியை வாகை எனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லை எனவும் வேறுபடுத்து வழங்குதல் பிற்கால வழக்காகும். தமிழ் இலக்கி. வழக்கில் வாகைத் திணைப் பகுதிகள் மிகப் பாக்துபட்டு வருகின் றன. எனினும், தொல்காப்பியர் அவற்றை ஒருவது எ9ாகத் தொகுத்துரைப்பர். அலுவகைப் பட்ட பார்ப்பனர் பக்கமும் ஐவகை மரபீன் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செப்தி மூவகைக் காலமும் கேறியின் ஆற்றிய அறிவன் தேயமும் காலிகு வழிக்கில் தாபதப் பக்கமும் பாலறி மரபில் பொருகர் கண்ணும் அனைசிலை வகையோடு ஆங்கெழு வகையால் தொகைகிலை பெற்றது என்மனார் புலவர்.”* என்ற நூற்பாவால் இதனை அறியலாம். (1) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழிலும் பார்ப்பாடுக் குரியவை. (2) ஐவகை மரபின் அரசர் பக்கம் : ஒதல், வேட்டல்: சதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரசர்க் குரியவை. (3) இருமூன்று மரபின் ஏனோர்பக்கம். ஏனோர், வணிகரும் வேளாளரும், ஒதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம்: 21. புறத்திணை. நூற். 19 (கச்சி.) 22. புறத்திணை - நூற். 20 (கச்சி.)