பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 229. களாகப் புறப்பொருள் இலக்கணத்திலும், கட்பு முதலான ஐக்து உணர்ச்சிகளையே குறிஞ்சி முதலிய திணைகளாக அகப்பொருள் இலக்கணத்திலும் பண்டையோர் அடிக்கிக் கூறியுள்ளார் என்று ஈண்டு அறிதற்பாலது. எனவே, இத் துணையும் கூறியவற்றால் அகப்பொருள் கருத்துகளும் புறப்பொருள் அமைப்புகளும் இனமாகவே அமைந்துள்ளன என்பது உணரப்படும். அங்ங்னமே? அகப்பொருட் பாகுபாட்டிற்கேற்பவே புறப்பொருட் பாகுபாடும் அமைந்துள்ளது என்பதும் தெளியப்படும் இனி, இவற்றை ஒவ்வொன்றாக விளக்குவோம். வெட்சி x குறிஞ்சி : ஆசிரியர் தொல்காப்பியனார் அகத் திணைக் குறிஞ்சிக்குப் புறனாகப் புறத்தினை வெட்சியைக் கூறுவர். ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே? என்பது அவர் கூறும் விதி. ஒரு திணையை எடுத்து விளக்க வேண்டுமானால், அக்தத் திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருள் களை ஆராய்தல் வேண்டும். முதற்பொருளாவன,கிலமும் பொழுதும்: கருப்பொருளாவன, தெய்வம் உனா மா மரம் முதலியன ; உகிப் பொருளாவன, புணர்தல் பிரிதல் இருத்தல் முதலியன. இவற்றுள் முதன்மையாய், ஈண்டைக்கு வேண்டிய வகையாய்க் குறிஞ்சித் திணைக்குக் கொள்ளத் தகுவன நிலமும் பொழுதும் என்னும் முதற் பொருளும், பூவென் னும் கருப்பொருளும், புணர்தல் என்னும் உரிப்பொருளுமாகும். குறிஞ்சிக்கு சிலம், மலை சார்ந்த இடம்: பொழுது, கள்ளிரவு; பூ அம்மலைகிலத்துப்பூ புணர்தல், களவுப் புணர்ச்சியாகும். அங்ஙனமே வெட்சியொழுக்கத்திற்கு நிலம் : மலைக்கானமே ; பொழுத, கள்ளிர வே: பூ, அம்மலைக்காட்டிற் பூக்கும் வெட்சிப்பூவே புணர்தல், களவினால் ஆகி ைகோடலே. இவற்றால் வெட்சி குறிஞ்சிக்குப் புறனாக அமைந்ததைத் தெளியலாம். இதனை மேலும் விளக்குவோம் : வெட்சிக்கும் குறிஞ்சிக்கும் கிலம், மண்ணின் திரளையுய மண்ணின் இயல்பும் மிக்கு விளங்கும் கரடுமுரடான மலை நிலமாகும். ஆகலின், புறப்பொருள் அரிசன் மண்ணசையால் வெட்சியொழுக்கம் மேற்கொண்டு ஆகிரையைக் கவர்ந்தான் அகப்பொருள் தலைவன் அம்மண்ணினால் உருவாகி அதனினும் துட்ப இயல்பு வாய்ந்த பெண்ணுடம்பு வேட்கையால் குறிஞ்சி யொழுக்கமாகிய களவுடபுணர்ச்சியை மேற்கொண்டான்.