பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龙3Q தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை மண்ணினின்று உயிர்கட்கு கேரே உண்டாகும் உணர்ச்சி திண்மை. அத்திண்மை எனப்படும் வலியுணர்ச்சியால் அரசன் போர்க்குத் தொடுத்த வெட்சி புறப்பொருளாயிற்று. அத்திண்மை எனப்படும் கெஞ்சுறுதி வன்மையால் தலைவன் தன் தலைவியைக் களவாடுதற்கெண்ணிய குறிஞ்சி அகப்பொருளாயிற்று. போர்ச் செயல் விரும்பும் வலியுணர்ச்சியும் தலைவியின் களவொழுக்கம் விரும்பும் கெஞ்சுதுதியும் ஆகிய இரண்டும் திண்மை புணர்ச்சியின் பாற்படுமேயாயிலும், அவ்விரண்டனுள்ளும் பின்னது துட்பம் வாய்த்ததாகலின், அஃது அகமாயிற்று முன்னது புறமாயிற்று. திண்மை என்பது, ஒன்றோடொன்று இணைந்து கூடி வலி வாகும் இயல்புடையது. ஆகவே, அரசன் அயல் காட்டையும் தன் காட்டோடு சேர்க்கும் கூட்ட உணர்ச்சியினால் வெட்சியை மேற் கொண்டான் தலைவன் தன்னோடு தன் தலைவியைப் புனர்க்கும் கட்புணர்ச்சியினால் குறிஞ்சியை மேற்கொண்டான். அரசனது அடிட். உணர்ச்சியினும் தலைவனது கட்புணர்ச்சி நுணுக்க முடைத்திாதல் அறிதற்பாலது. அரசனது யோருக்கு அவன் உடம்பின் வலிமை பயனாயிற்று : அங்ஙனமே, தலைவனது களவொழுக்கத்திற்கு அவன் உடம்பின் ஊ பயனாயிற்று. போர் கிகழ்ச்சியில் ஓங்கிக் குத்துதலும் வெட்டுதலும் செய்யும் உடல் வன்மையினும், களவொழுக்க கிகழ்ச்சியில் மெல்லத் தொடுதலும், தைவாலும் (தடவுதல்) ஆகிய உடம்பின் ஊறு மிகவும் துட்பமானது. ஓரிடத்தில் பகையுணர்ச்சி முதிர்ந்தால், அது நுணுகிப் பிறி தோரிடத்தில் இட்புணர்ச்சியாக மிகுமாதலின், அரசனது பகை புணர்ச்சி புறமாயிற்று தலைவனது நட்புணர்ச்சி அகமாயிற்று. மேற்கூறியவற்றால் வெட்சி குறிஞ்சிக்குப் புறமாதலை அறியலாம். மண்ணின் பொருட்பயிற்சி வெட்சி என்னும் திண்மை புணர்ச்சியாய் துணுகிப் புறப்பொருள் தலைவனாக இருந்த அரசன் அகப்பொருள் தலைவனாக மாறுகின்றான். மலைக்கானங் களில் விலங்குகளை வேட்டையாடச் சென்ற அரசன் ஆங்கு விலங்குகளோடு போர் செய்து புறப்பொருள் தலைவனாகத் திகழ்கின்றான் : புற உணர்ச்சி துணுக நுணுக அவன் ஆங்கே அப்பொழுதே தன் தலைவியொடு களவில் ஒழுகி அகவுணர்ச்சி மிகுந்து அகப்பொருள் தலைவனாய் விளங்குகின்றான். இதனை உட்கொண்டே பண்டைத்தமிழ் இலக்கியங்கள் யாவும் வேட்டமேற் சென்ற அரசன் ஆங்கொரு பொழிலகத்துத் தன் தலைவியைக்