பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 231 கண்டு இயற்கைப் புணர்ச்சி எய்தினான் என்று ஒரு வரலாறாக ஒருவாய்ப்பட்டாற்போல் துவல்கின்றன. வஞ்சி x முல்லை ? வஞ்சி என்னும் புறப்பொருள் தனக்கு அகமான முல்லை ஒழுக்கத்தோடு எங்கனம் பொருந்துகின்றது. என்பதைக் காண்டோம். முல்லைக்கு நிலம், காடுசார்ந்த இடம் : பொழுது, கார் கால மாலை : பூ, அக்காட்டிடத்துப்பூ இருப்பு இளமரக்கா சூழ்ந்த வீடு. அங்ங்னமே, வஞ்சி யொழுக்கத்திற்கும் முதல் கரு உசிப்பொருள்களான இடமும் பொழுதும் பூவும் இருப் பும் முறையே காடும், வேனில் இறுதியாகிய கார் கால இயல் பமைந்த மாலையும், காட்டிடத்திற் பூக்கும் வஞ்சிப்பூவும், பாடி வீட்டிருப்புமாகும். தலைவி தனது வீட்டில் போர்மேற்சென்றி தலைவனின் வரவை எதிர்கோக்கி இருத்தல் போலத் தலைவன் பாடி வீட்டில் இருப்பான். இவ்விருவகை இருப்பு நிகழ்ச்சிகளும் வேனிற்காலத்தே நிகழ்வனவாயினும், அவ்விருப்பைப்பற்றிய உணர்ச்சி முனைப்பு கார் கால இயற்கையதான வேனிலிறுதிக்கண் விளையுமாதலின் ஆசிரியர் அதற்குக் கார்காலமே காலமாக வரைந்து ஒதினார் என்று அறிதல் வேண்டும், இவ்வாற்றான் வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. இதனை மேலும் விளக்குவோம். காட்டினை நினைத்தவுடன் தமது உணர்ச்சிக்குச் செடிகொடிகளின் ஈட்டமே உருவாய்த் தோன்று கிறது. காடுகளில் மண் நீர் முதலிய ஐந்து பொருள்களிலும் சிறப்பாகக் காணப்படுவது ர்ே; அஃது அங்குள்ள செடிகொடிகளின் பயனாகும், இவ்வுலகில் காடிருக்கும் இடங்களிலேயே மழை கிரம்பப் பெய்கின்றது : குளிர்ந்த காற்றும் அங்குத்தான் வீசும். மழைக் காலத்தில் மழையும் வேனிற்காலத்தில் குளிர் காற்றும் தக்து காடுகள் தமக்குரிய நீர்த்தன்மையை வெளிப்படுத்தும். நீரினின்று உயிர்கள் நேராக உணரும் உணர்ச்சி தண்மை என்பது. தணிதல், ஆறுதலாகும். வஞ்சியொழுக்கம் என்பது கறுவு தீர்க்கும் செயலாதலின், அஃதொரு தணிதலாகும். முல்லை உம் தலைவி தனது காமக்கொதிப்பைப் பொறுத்திருக்கக்கூடிய ஒரு வகைத் தணிதலாகும். மேலும், மண் முதலான ஐம்பொருள்களில் ரிேனைச் சுவைத்துக் காண்பது வாய் என்பதை நாம் நன்கு அறி வோம். போர்மேற் சென்ற வேந்தன் வஞ்சியொழுக்கத்தில் அடிக் கடி நீரைச் சுவைக்கும் வாய்ப்புகள் நேரிடும். இக்காலத்திலும் படை வீரர்கட்கு நீர் ஒரு பெரிய பாதுகாப்புப் பொருளாக வேண்டப் படுகின்றது. தலைவன் பிரிவினைப் பொறுத்துக்கொண்டிருக்கும் முல்லையிருப்பின் கண்ணும் அவளை ஆற்றுவித்தற் பொருட்