பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 235 பொருளின் இயல்பான உழிஞையென்னும் வெம்மையுணர்ச்சி கட்பொறி கொண்டு ஒளி காணும் செயலால் மருதம் என்னும் அறிவின் திறமாய் துணுகி அமைந்திருப்பதையும் ஒர்ந்து உணர்க. தும்பை x கெய்தல் : தும்பையென்னும் புறத்திணை யொழுக்கம் தனக்கு அகமான நெப்தல் ஒழுக்கத்தோடு பொருந்து வதை ஆசாய்வோம். நெய்தலுக்கு கிலம், கடலும் கடல் சார்ந்த மணல் வெளியும் உப்பங்கழியுமாகும். அதற்குரிய சிறுபொழுது, எற்பாடாகும். எற்பாடு, பகற்பொழுதின் பிற்கடிது, அலையிடை வளியும் பொழிலிடை மணமுமான நெய்தல் கிலப்பயன்கள் எல்லாம் எழுகின்ற கேரம் எற்பாட்டு நேரமேயாகலின், அவற்றைத் தலைவி து கர்ந்து கானும் நேரம் அதுவே என்க. உரையாசிரியர்கள் அனைவரும் ஆறு பெரும்பொழுதுகளையும் இதற்குரியனவாகக் கொண்டனர். ஆனால், இளவழகனார் மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு என்னும் சிறுபொழுதுகளாறும் காசி, கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும்பொழுதுகளாறோடும் முறையே இயைபுடையன என்று கொளவதே இயற்கையாகும் என்று கொண்டு முதுவேனிலை கெய்தலுக்குரிய பெரும்பொழுதாகக் கொள்வர். பூ, நெய்தற் பூ : ஒழுக்கம், இரங்கலும் இரங்கல் கிமித்தமும், இங்ஙனமே, தும்பை யொழுக்கம் கிகழும இடம் மணல் பரந்த களர்வெளி கிலமான நெய்தல் கிலமே இதுவே போர் செய்தலுக்கு ஏற்ற இடமாகும். இத்தும்பைத் திணையைப்பற்றிக் கூறும் பழந்தமிழ்ப் பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் கடலையும் கடற்புறத்தையும் பற்றிய கருத்துகளே உவமைப் பொருள்களாக எடுத்துக்காட்டப் பெற்றிருத்தில் இதனை வலியுறுத்தும். இப்போரொழுக்கம் முனைப்பாய் கிகழ்ந்து முடியும் நேரம் ஞாயிறு பொழுதுபடும் போதாகும். அஃதாவது எற்பாடு: பிற்பகல் போர்மேற்சென்ற தலைவன் கார் காலத்துத் தொடக்கத்தில் போரை முடித்துத்திரும்பு வான் என்று தண்டமிழ் இலக்கண இலக்கியங்களும் முல்லை யொழுக்கத்தில் முடித்துக் கூறுதலின், பகைமேற்சென்ற தலைவ லுக்கும் போர் கிகழும் காலம் அக்கார்ப் பருவத்திற்கு முன்பருவ மான முதுவேனிற்பருவமே என்று கோடலால் தவறு ஒன்றும் இல்லை. பேரொழுக்கத்திற்குரிய தும்பைப்பூ ஏனைய விலங்களில் பெறப்படாமையின் அது நெய்தல் கிலத்துப் பூ வென்றே கொள்ளப் 10. பண்டைத்தமிழர் பொருளியல் வாழ்க்கை (கழகப்பதிப்பு) -பக் 99. பொழுதுகள் பற்றி இவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி பக் 96 - 102) சிக்தனைக்குரியது.