பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 さ z இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் எனக்குநீ செய்யத் தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி உனக் குகான் செய்வ தானேன் என்னின்யார் உலகத் துள்ளார். என்ற கம்பராமாயணப் பாட்டில் (இராவணன் சோகப்.-39) இராவணன் கண்ணே தோன்றிய இழிவு பற்றிய அழுகையைக் காண்க. (ஆ) பிறன்கண் தோன்றிய இழவு பற்றிய அழுகை : கைகேயி கொண்ட வரங்களால் இசாகன் காடிழந்து காடு செல்கின்றான் என்பதை சினைக்து னகரத்திலுள்ளாச் பலர் அழுகின்றனர். ஆடினர் அழுதனர் : அமுத ஏழிசை பாடினர் அழுதனர் : பரிந்த கோதையர் ஊடினர் அழுதனர் : உயிரின் அன்பரைக் கூடினர் அழுதனர் குழாங் குழாங்கொடே. என்ற கம்பராமாயணப் பாடலில் (ககர் நீங்கு. 213) ஆடுதல் முதலியன நிகழ்த்தியோரிடத்து அத்தொழில் நீங்கி அழுதல் தோன்றியவாறு காண்க. (ங்) அசைவு பற்றி வரும் அழுகை (அ) தன்கண் தோன்றிய அசைவு பற்றிய அழுகை : விசயை தன் பண்டைய கிலைகெட்டு, சுடுகாட்டில் சீவகனை சன்று, தன் முன்னைய நிலையை கினைந்து அன்றைய சிலைக்கு அழுகின்றாள். வெவ்வாய் ஓரி முழவாக, விளித்தார் சமம் விளக்காக, ஒவ்வாச் சுடுகாட் டுயர்:அரங்கில் நிழல்போல் துடங்கிப் பேயாட, எவ்வாப் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வாறாகிப் பிறப்பதோ ? இதுவோ : மன்னர்க் கியல்,வேந்தே ! என்ற சிந்தாமணிப் பாடலில் (சிங்தா. 309) விசயை தன்கன் தோன்றிய அசைவுபற்றி அழுவதைக் காண்க, தொல்.-17