பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை புகழ் எய்துவான் ஒருவன் செயல் : அலியரென வழிமொழியலன் மெலியரென மீக்கூறலன் என்பது புறம் (புறம், 239). எனவே, இவற்றிற்கு எதிராய வலியரென வழி மொழிதல், தன்கண் தோன்றிய மென்மை பற்றி ஒருலற்கு இளிவரல், .ெ டீ லி ய .ெ ன மீக்கறல், பிறர் கண் தோன்றிய மென்மை பற்றிய ஒருவன் வன்சொல்லால் அவன் இளிவரல் எய்துவது என அறிக. .ே இருட்கை மருட்கை என்பது, வியப்பு. இதன் இயல்பை ஆசிரியர் தொல்காப்பியர், புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை கான்கே.8 என்ற நூற்பாவால் கூறுவர். இவற்றுள் புதுமை என்பது, முன்னறியா யாணர்த்தன்மை. அஃதாவது, நூதனம்: "யாதொன் நானும் எவ்விடத்திலும் எக்காலத்தினும் தோன்றாததோர் பொருள் தோன்றிய வழி வியத்தல். அது கந்திருவர் அக்தரம் போவது கண்டு வியத்தல் போல்வன” என்பர் இளம்பூரணர், பறழுக்கு வயிற்றில் புறப்பையுடைய கங்காரு, பறக்கும் மீன், சிற்றுயிருற்றக்கால் பற்றிப் பிசைக்துண்ணும் பூச்செடி, கையிடலங்குஞ் சிறுகாய், கண் கொள்ளாப் பெருமலை, முக்கண், ஜங்கால், அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்புடைய உயிர்கள், பெண் ஆணாதல், ஆண் பெண்ணாதல் முதலியவற்றைக் காணுங்கால் எழும் உணர்வு புதுமையிற் பிறக்கும் வியப்பாகும். இது பெரிதும் இயற்கையில் தோன்றும் இயல்பிற்றாம். பெருமை என்பது, பண்டு கண்ட போருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்ட வழி வியப்பு வரும். சிறுமை என்பது, இறப்பச் சிறியன கண்டு வியத்தல். அது கடுகின் பல துளை’ போல்வன. ஆக்கம் என்பது, அறிவுடை மக்கள் சமைப்பாலாவது: எனவே, ஆக்க மருட்கை செயற்கையில் தோன்றும் அரும் பொருள் விளைக்கும் வியப்பாகும். வானவூர்தி, பேசும்படம், தொலைக்காட்சி, அணுகுண்டு, ஸ்புட்னிக் போல்வன ஆக்க மருட்கையாம். ஆக்கம் 6. மெய்ப் - நூற். 7 (இளம்),