பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 263 என்பதை ஒன்றன் பரிணாமங்கண்டு வியத்தல் என்று கூறி, "அது தன்னளவின்றி கன்னிலஞ் சார்பாகத் தோன்றும் மரமுதலாயின. ஆகிய வழி வியத்தலும், கல்கூர்ந்தான் யாதொன்று மிலனதான் ஆக்கமுற்றானாயின், அதற்குக் காரணமுணராதான் அது கண்டு விபத்தலும் இளையான் வீரங்கண்டு வியத்தலுமாம். பிறவும் உல கத்து வியக்கத்தகுவன. எல்லாம் இவற்றின் பாற் படுத்திக் கொள்க’ என்பர். இவை கான்கும் தன் கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும்பற்றி எட்டாகும். உலக வழக்கினுள் கின்றவாறு கில்லாமல் அறிவினைத் திரித்து வேறுபடுத்துவது வியப்பென்னும் மெய்ப்பாடாதலின் அதனை மதிமை சாலா மருட்கை" என அ.ை புணர்த்தோதினார் ஆசிரியர். எனவே, திரியின்றி இயல்பாகிய அறிவுடன் கூடிய கிலையில் மருட்கை தோன்றுவதற்கு இடமில்லை என்பது புலனாகும். (க) புதுமைபற்றிய ம்ருட்கை (அ) தன் கண் தோன்றிய புதுமை பற்றிய மருட்கை : ஒரு தலைவனை ஆயத்தார் பலருங் கண்டனர். அவருன் தலைவி அவனைக் காதலித்தாள். அதனால் அவள் உருவமும் செயலும் வேறுபட்டுப் புதுமை அடைந்தனள். தான் ஒன்அ மறியாதாள் போலத் தன் தோழிக்குத் தன்பால் எப்திய புதுமையைக் காட்டி வியக்கின்றாள். மலர்தார் மார்பன் கின்றோற் கண்டோர் பலர் தில் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்குல் அனையொடு பொருந்தி ஒர்யா னாகுவ தெவன்கொல்’ என்ற அகப்பாட்டடிகளில் (அகம்-82) தன் கருத்து வெளிப்படாது தன் மெய்க்கண் தோன்றிய புதுமையைத் தலைவி வியக்ததனைக் காண்க. இது தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்கும் பாடல். (ஆ) பிற பொருட்கண் தோன்றிய புதுமைபற்றிய மருட்கை: மயில்கள் முன்பெல்லாம் ஆடும் நெறியானன்றிப் புதுமையாக ஆடின. அவற்றை மக்திகள் வியக்து நோக்கின. “மக்கி கல்லவை மருள்வன கோக்கக் கழைவளர் அடுக்கத் தியலி யாடுமயில்’ என்ற அகப்பாட்டடிகளில் (அகம் - 82) மயிலாகிய பிற பொருள்கள் எய்திய புதுமை பற்றி மந்திக்கு மருட்கை தோன்றியது காண்க.