பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதினைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 27 so ச) கொலையற்றி வரும் வெகுளி ஓர் அரசனைப்பற்றி மாற்றசசர்கள் அவன் புகழ் அழியும் இழிசொற்களைக் கூறினர். அது கேட்ட அரசன் சினக்தெழுந்து செரு வென்றான். உறுதுப் பஞ்ச துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்விய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேன ாையின் என்ற புறப்பாட்டடிகளில் (புறம்-72) சிறு சொல் கூறிய மாற்றாசர்கள் மீது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் கெடுஞ்செழியனின் சினம் வெளிப்படுதல் காண்க. 8. உவகை உவகை என்பது, காமம் முதலிய மகிழ்ச்சி. இதன் இயல்பினை, செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென அல்லல் நீத்த உவகை நான் கே. . என்ற நூற்பா உணர்த்துகின்றது. செல்வம் என்றது, செல்வத்தால் உண்டாகும் தகர்ச்சியினை. புலன் என்பது, கல்விப்பயனாகிய அறிவுடைமைபீனை. புணர்வு என்றது, அன்பொடு புணர்ந்த ஐக்திணை மருங்கிற் காமப்புணர்ச்சியினை. விளையாட்டு என்றது, யாறும் குளமும் சோலையும் முதலாகிய வனப்புமிக்க இடங்களில் தங்கித் துணைகொடு விளையாடி மகிழும் விளையாட்டினை. உலகியல் வாழ்வில் பிறரது துன்பத்தினைக் கண்டு கீழ்மக்கள் அடையும் போலி மகிழ்ச்சி உண்மையான உவகையாகாது என அறிவுறுத்தும் கோக்கத்துடன் அல்லல் நீத்த உவகை என அடைபுணர்த்தேசதினார் ஆசிரியர். (க) செல்வம் பற்றிய உவகை ஒருவன் தனக்குரிய இல்லின்கணிருந்து தன் முயற்சியால் எப்திய பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருத்து ஒக்கல் கட்கும் பகுத்துத் தன் கூற்றைத் தான் உண்டலால் மகிழ்ச்சி எய்துகின்றான். 10. மெய்ப் நூற். 11 (இளம்}.