பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை

ை- டு. ............... பிரிந்தோர்

கையற வக்த பையுண் மாலை” என்ற குறுக்தொகையடிகளில் (குறுக். 391) தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி வக்த மாலை என்பதில் இம்மெய்ப்பாடு வந்துள்ளதை அறிக. (2.6) இடுக்கண் என்பது, மலர்ந்த நோக்கமின்றி மையல் கோக்கம்பட வரும் இரக்கம். இடுக்கண் என்பதைத் துன்பமுறுதல்” என்பர் இளம்பூரணர். மேலதனோடு இதனிடை வேறுபாடு என்னையெனின், கையாறு என்பது இன்பம் பெறாமையான் வருக் துன்பம் இடுக்கணாவது, துன்பமாயின் வந்துறுதல்’ (இளம்.) எ டு. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். என்ற குறட்பாவில் (குறள் -625) இடுக்கண் என்பது வருவ: தொன்றாகக் கூறியவாறு காண்க. கையாறு என்பது, மனத்தின்கண் நிகழ்வதோர் மெய்ப்பாடு : இஇக்கண் என்பது, மெப்யானும் தோற்றுவதோர் மெய்ப்பாடு. {27} பொச்சாப்பு என்பது, அற்றப்படுதல், அஃதாவது, பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஒர் இகழ்ச்சியான் இடையறவு படுதல். பொச்சாப்பு - மறத்தல். (இளம்.) எ - டு. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். என்ற குறளில் (குறள் - 199) பொச்சாப்பு மறத்தலாயிற்று. (28) பொறாமை என்பது, பிறருக்கு ஆக்க முதலாயின. கண்டவழி பதனைப் பொறாது கடக்கும் மன நிகழ்ச்சி. அதனை அழுக்காது என்ப. எ - டு. அழுக்க றெணவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். என்ற குறளில் (குறள் - 168) அழுக்காறு’ என ஒரு மெய்ப்பாடு, உளதாகியவாறு கண்டு கொள்க. (29) வியர்த்தல் என்பது, பொறாமை முதலாயின பற்றி மனம் புழுங்குதல். தன்மனத்தின் வெகுட்சி தோன்றிய வழிப் பிறப்பதோர் புழுக்கம் (இளம்). - જ