பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 3. கருத்துடைய ஆசிரியர்கள் பெருகி ஒருவரோடு ஒருவர் வாதம் செய்து வந்தனர். இந்த நிலையில் இளம்பூரணர் தொல் காப்பியத்தை முழுதும் நன்கு ஆய்ந்து தம்முடைய கூரிய மதியால் தெளிவான உரை எழுதினார்.மேற்கூறியவாறு நூலின்பொருளமைதி மாறுபட்டு முழுவதும் புலனாகாது மறைந்த இடர் நிலையில்தான் அவர் உரை எழுந்தது. அவர் உரை மூன்று அதிகாரங்களுக்கும் முற்ற முடிய உள்ளது. இக்தி அரிய பெரிய நூலுக்கு முதன் முதலாக உரை வகுத்த பெருமையால் இவரை இடுகுறிப் பெயரால் கூறாது உரையாசியர்' என்ற சிறப்புப் பெயராலேயே மக்கள் வழங்கி வருவாராயினர். இவருக்குப் பின்னர் வடநூற்கடலை கிலை கண்டுணர்ந்த சேனாவரையர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தை மட்டிலும் துணுகி ஆய்ந்து, தம் மதி நுட்பத்தால் ஒரு கல்லுரையை எழுதினார். இஃது இன்றுகாறும் நம்மிடையே பீடுடன் உலவி வருகின்றது. பேராசிரியர் என்பார் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய கான்கு இயல்களுக்குமட்டிலும் உரை வகுத்துள்ளார். இவர் உரையைப் பயிலும் போது இவர் நூல் முழுவதற்கும் உரை கண்டனர் என்று எண்ணவேண்டியுளது. அவ்வுரை இதுகாறும் கமக்குக் கிட்டவில்லை. நச்சினார்க்கினியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டிற்கும் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய ஐந்து இயல்களுக்கும் உரை எழுதியுள்ளார். ஏனைய நான்கு இயல்கட்கும் இவர் உரை கண்டதாகத் தெரிய வில்லை. கல்லாடர் சொல்லதிகாரத்தில் சில பகுதிகளுக்கு மட்டிலும் உரை வகுத்துள்ளார். இவர் உரை முழுவதும் இன்னும் வெளிவர வில்லை தெய்வச்சிலையார் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டிலுக்தான் வெளி வந்துள்ளது. ஆகவே, தொல்காப்பியத்திற்கு இன்னின்னார் இன்னின்ன பகுதிகட்கு உரை வகுத்துள்ளனர் என்பதை அறுதியிட்டு: உரைத்தற்கு அகச்சான்றுகளோ புறச்சான்றுகளோ கமக்குக் கிடைத்தில. இத்தகைய உரைவளங்கள் நூலாசிரியரின் கருத்தை நன்கு அறிவதற்குத் துணை புரிகின்றன என்றாலும், சில இடங்களில் குழப்பத்தையும் உண்டாக்கிவிடுகின்றன. எனினும்: இளம்பூரணர் உரை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பெற்றியுடன் திகழ்கின்றது. 6. gyöðoirár gy—Internal evidence. 7. Li pë&T6ö7 foj-Externa1 evidence.