பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பொருளதிகாரத்துள் அமைந்துள்ள இயல்களையும் நூற்பாத் தொகையையும்பற்றி இரண்டு வெண்பாக்கள் காணப்பெறு கின்றன. ஈட்டும் அகத்திணையும் ஏய்ந்த புறத்திணையும் காட்டும் களவியலும் கற்பியலும்-மீட்டும் பொருளியல்மெய்ப் பாடுவமம் போற்றிய செய்யுள் மரபியலும்.ஆம் பொருளின் வைப்பு.8 பூமலர்மென் கூந்தால்: பொருளியலின் சூத்திரங்கள் ஆவ அறு நூற்றறுபத் தைந்தாகும்-மூவகையால் ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்8 இவற்றால் பொருளதிகாரத்திலுள்ள இயல்கள் ஒன்பது என்பதும், நூற்பாக்கள் 665 என்பதும், தொல்காப்பிய முழுமைக்குரிய நூற்பாக்கள் 1610 என்பதும் தெரிகின்றன. இப்போது பொருளதிகார நூற்பாத் தொகை 666 ஆக உள்ளது, இஃது ஒரு நூற்பாவை இரண்டாகக் கொண்டு உரைகாரர் பொருள் கூறியதனால் போந்தது. இந்த ஒன்பது இயல்களில் அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்ற நான்கும் அகப்பொருளையும், புறத்திணையியல், புறப் பொருளையும், ஏனையியல்கள் முறையே மெய்ப்பாடு, உவமம், யாப்பு, மரபு ஆகியவற்றையும் விளக்குகின்றன. 8. செந்தமிழ்-தொகுதி 2. பக். 117