பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல் பொச்சாப்பு மடமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை என்றிவை யின்மை என்மனார் புலவர், ! என்ற நூற்பாவில் கூறப்பெறுகின்றன. ே ம்ேபிரி என்பது, பிழைபொறாப் பெற்றி அஃதாவது, சகிப்பின்மை, இஃது அழுக்காறு அன்று. இது காதல் வாழ்வுக்கு ஏதமாதலின் விலக்கப்பட்டது. சிம்பிரி’ என்ற சொல் ஆசிரியரால் மிக அருமையாக வழங்கப்பெறுகின்றது. கொடுமை என்பது, அரன் அழிய கெறி பிறழும் இயல்பு. வியப்பு என்பது, மருட்கை : அஃதாவது, தலைமகள்பால் தெய்வத் தன்மை கண்டான் போல் வியக்தொழுகுதல். இதனை அற்பு கம்’ என்பர் வடநூலார். இஃது ஒத்த காதலுக்கு ஒல்லாக் குற்றமாகும். மருட்கை மதிமை சாலா காதலின், அஃதுள்வழித் தலையாய காதல் நிலையாது. கற்பறக் காதல் வாழ்வில் காரைக்காலம்மையாரின் அற்புதச் செயல் கண்டு அவ்வம்மையை அணங்கேன மருண்ட பரமதத்தனுக்குக் காதல் ங்ேகியதால், வியப்பு காதலுக்கு ஏலாக் குற்றமாதல் அறிக. புறமொழி என்பது, பழி துசற்றுதல் ; இல்லாட்கு நல்லறம் *புறஞ்சொல் மாணாக்கிளவி யென மேற்கூறியதனாலும், பழி துசற்றும் தவறுடைமை காதல் வாழ்வுக்கு ஏதம் பயக்குமாதலாலும் இது விலக்கப்பட்டது. வன்சொல் என்பது வருத்தமுறுத்தும் கடுஞ்சொல் : அஃதாவது கண்ணோட்டமின்றிச் சொல்லும் சொல். பொச்சாப்பு என்பது, கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல் ; அஃதாவது சோர்வு. மடமை என்பது, சோம்புள்ளம் : முயற்சி யில்லாத உள்ளம். குடிமை இன்புறல் என்பது, தலைவி தன் குடியுயர்வுள்ளியுவத்தல், இது கற்புக் காதலுக்குப் பொருக்தாது. முன்னர்க்களவியலில் இருவர்க்கும் குடிமைஒப்புமைகன்றாம் என்றும் அன்றேல், தலைவன் மிக்கோனாதல் தவறாகாது எனவும் கூறி, எஞ்ஞான்றும் தலைவியின் உயர்வைத் தவர்த்தமை ஈண்டு நினைவு. கூர்தற்பாலது. ஏழைமை மறப்பு என்பது, எளிமையை மறப்பது. தணிவுணர்வு மறப்பது. அன்பொழுக்கத்திற்கு ஆகாத தவறு. அஃகி. அகன்ற அறிவுடையளாயினும், பிற பெருமை அனைத்தும் உடையளாயினும், தணிவொடு பணிதலும் தாழ்ந்தவனெனினும் தலைவனுயர்வு தன்னுள்ளத்து கிறுத்தலும் காதல் தலைவிக்கு 5. மெய்ப்-நூற். 26 (இளம்.) 6. இந்நூற்பாவின் பொருள் டாக்டர் ச. சோ. பாரதியார் அவர்களின் மெய்ப்பாட்டியியல் உரை கோக்கி எழுதப்பெற் றது