பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 20 اور கோலி ரண்டாகும் பாலும குண்டே' என்ற துரத்பாவால் புலப்படுத்துவர் ஆசிரியர். அவை யாவன : வினையுவமம், வினையும் வினைக்குறிப்புமென இருவகையாம். பயன் என்பது, நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இரு வகையாம். மெய் என்பது, வடிவும் அளவும் என இருவகையாம். உரு என்பது, கிறமும் குணமும் என இருவகையாம். இவ்வகையினால் எட்டாயின' என்பர் இளம்பூரணர். இனி, மேற்கூறிய கால்வகை யுவமமும் உவமத்தொகைகான்கும் உவம விரி நான்குமாக வருதலால் எட்டாதலுடைய எனவும், முன்னர் வினை முதலிய நான்கு உவமை களுக்கும் எல்வெட்டுருபுகளாகத் தொகுத்துரைக்கப்பட்ட ஒவ் வொரு தொகுதியும் இரண்டு கூறாகி காலிரண்டு எட்டுப் பகுதிகளாக வரும் எனப் பகுத்துரைத்தலும் பொருந்தும் எனவும் கொள்வச் பேராசிரியர், பெருமை பற்றியும் சிறுமை பற்றியும் ஒப்புமை கொள்ளப் படும் உவமைகள் நகை முதல் உவகை ஈறாகச் சொல்லப்பட்ட எண் வகை மெய்ப்பாடுகளின் வழியே புலப்படத் தோன்றும் என்பர் அறிஞர். எனவே, எண்வகை மெய்ப்பாடும் பற்றி உவமை எட்டெனப்படும் என்பதாயிற்று. எடுத்துக்காட்டாக, "அவசப்போல் அகன்றதன் அல்குல்மேற் சான்றோர உவா.அப்போல உண்டே மருங்குல்' என்பது பெருமையும் சிறுமையும் பற்றி உவகை நிகழ்ந்தது. 'பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வரும்செல்லும் பேரும்என் கேஞ்சு’ என்று முத்தொள்ளாயிர அடிகளில் பெருக்கம் பற்றி இழிவால் வந்தது. பிறவும் இவ்வாறே கொள்ளப்படும். மேலும் சில மரபுகள் உவமை எனப்பட்ட பொருளால் உப மேயமாகிய பொருளுக்கு ஒத்தனவெல்லாம் அறிந்து துணியும் பொருட்பகுதியும் உள்ளன ; பலவாகி வரும் அப்பொருட் பகுதி களின் இலக்கண வகையைக் கருவியாகக் கொண்டு அவை நன்கு துணியப்படும். இவ்வாறு உவமையாகிய பொருளைக்கொண்டு 15. உவம - நூற் 18 (இளம்.) 16. உவம. - நூற். 12, 14, 15, 16 (இளம்.) 17. டிை - நூற், 19. (இளம்.) 18. உவம - நூற். 20 (இளம்.)