பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 3 2 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ஐவகை அடியும் விரிக்குங் காலை மெய்வகை அமைந்த பதினேழ் கிலத்தும் எழுபது வகையின் வழுவில வாகி அறுநூற் றிருபத் தைக்தா கும்மே.”* என்ற துசற்பாவால் இதனை அறியலாம். அடி அறு: நூற்றிருபத்தைந்தாமாறு : அசைச்சீர், இயற்சீர், ஆசிரியவுரிச் சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சிர் என்ற ஐக்தினையும் கிறுத்தி, இவ் வைந்து சீரும் வஞ்சிச்சீராக உறழும் வழி இருபத்தைக்து விகற் பமாம். அவ்விருபத்தைந்தின்கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்பமாம். அந் நூற்றிருபத்தைந்தின் கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ அறு நூற்றிருபத்தைக் தாம்’ என்று விளக்குவர் இளம்பூரணர். அடிகளின் பாகுபாட்டினை கன்குனர்ந்தோர் காற்சீரடிகளை விரித்தாற்போன்று ஐஞ்சீரடி முதலாக வரும் ஏனைய அடிகளையும் பெருக்கிக் காணுமிடத்து அவை வசம்பீலவாம் என்பர் ஆசிரியர். ஆங்கனம் விரிப்பின் அளவிறக் தனவே பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை, ! ? என்பது அவர் கூறும் விதி. அஃதாவது, அறுநூற்றிரு பச்தைந்தினோடும் ஐந்தாவது வரும் சீரையும் உறழ் மூவாயிசத்தொரு நூற்றிருபத்தைக்து விகற்பமாம். அதன் கண் ஆறாவது இவ்வகை ஐந்து சீரையும் உறழப் பதினையாயிரத்து அறுநூற்றிருபத்தைந்து விகற்பமாம். அதன்கண் ஏழாவது வரும் சீரைக்தினையும் உறழ எழுபத்தெண்ணாயிரத்தொரு நூற்றிருபத் தைந்து விகற்பமாம். இவ்வகையினா னுறழ வரம்பிலவாய் விரியும். அன்றியும், இச்சொல்லப்பட்ட அடியினை அசையானும் எழுத் தானும் விரிக்க வரம்பிலவாம்’ என்பது இவ்விதிக்கு இளம்பூரணர் தரும் விளக்கம். பதினேழ் கிலத்தனவாக மேல் வகுக்கப்பெற்ற, ஐவகையடியும் ஆசிரியப்பாவிற்கு உரியன. அவை தனித்தனி புரியனவாகி வருதலேயன்றி விரவி வரினும் விலக்கப்படுதல் இல்லை என்பர் 16. செய்யு - நூற். 48. (இளம்.) 17. டிை நூற். 49. (இளம்.) 18. பதினேழ் நிலம்-காலெழுத்து முதல் இருபது எழுத்து ஈறாகவுள்ள பதினேழும். -