பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

二?53 தொல்காப்பிடம் காட்டும் வாழ்க்கை என்பது தொல்காப்பியம். ள் ஒத்தனவே கூறல் வேண்டும் என்பதாம். சொல்லதிகாரத்தில் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்ற மூன்றன் பொருளையும் வேற்றுமையென ஒரினமென்று ஒரோத்தாக வைக்காமல் வேறு வேறு வைக்கப்பெற்றிருப்பதினால் இதனை நன்கு அறியலாம். படலம் என்பது, ஓரினமாகிய கெறியின்றிப் பல நெறியான் வருவன பொருளால் பொதுமொழியால் தொடர்பு பெறுவது அஃதாவது, ஒரு கெறிப் பொருட்துப் பொதுவாகப் பட்டதனை விலக்கி, விரவிய பொருட்குப் பொதுவாக மொழிவதாகும். இதனை அதிகாரம்’ என்றும் கூறலாம். ஒருநெறி யின்றி விரவிய பொருளால் பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும். . என்பது தொல்காப்பியம். எடுத்துக்காட்டாக, கிளவியாக்கம் முதலாக எச்சவியல் ஈறாகக் கிடந்த ஒன்பதோத்தினும் உள்ள பொருள்கள் வேறுபாடுடையவாயிலும், அவை யாவும் சொல்லிலக் கணம் உணர்த்தினமையால் சொல்லதிகாரம்’ என்று பெயர் பெற்றது. பிண்டம் என்பது, மேற்கூறிய சூத்திரம், ஒத்து, படலம் என்ற மூன்று உறுப்புகளையும் ஒருசேரத் தன்னகத்தே கொண்டு இலங்குவது. மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவர்.அது பிண்டம் என்ப.' என்று இதனை விளக்குவர் தொல்காப்பியர். மூன்றுறுப் படக்கு தலாவது, சூத்திரம் பலவுண்டாகி ஒத்தும் படலமும் இன்றாகி வரினும், ஒத்துப் பலவுண்டாகிப் படலமின்றி வரினும், படலம் பலவாகி வரினும் அதற்குப் பிண்டம் என்று பெயரார்’ என்று இதற்கு விளக்கம் தருவர் இளம்பூரணர். அவற்றுள் சூத்திரத்தால் பிண்டமானதற்கு இறையனார் கனவியலையும், ஒத்தினால் பிண்ட மானதற்குப் பன்னிரு படலத்தையும், அதிகாரத்தால் பிண்டமான திற்குத் தொல்காப்பியத்தையும் எடுத்துக்காட்டுகளாகக் கொள்ள லாம். இவற்றை முறையே சிறுநூல், இடைநூல், பெருநூல் என்றும் வழங்குவர். மேற்கூறியவாறு நூல் கான்கு முறையில் கடைபெறும் என்பதை, - 10. செய்யு - நூற் 164 (இளம்.). 11. செய்யு - நாற் 165 (இளம்.)