பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36C தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்பது ஈண்டு அறியத்தக்கது. இவற்றுள் ‘பாட்டிடை வைத்த குறிப்பு’ என்பது, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தில் இடையிடையே வரும் உரைகடையைப் போன்றது. "பாவின் றெழுந்த கிளவி என்பது, உலக வழக்கில் பாட்டின்றித் தனியே வழங்கும் வசன கடை. வழக்கின்கண் ஒரு பொருளைக் குறித்து வினவுவாரும் செப்புவாரும் கூறும் கூற்று” என்பர் இளம்பூரணர். பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி' என்பது, ஒரு பொருளின்றிப் பொப்படத் தொடர்ந்து சொல்லுவது. அஃதாவது, யானையும் குருவியும் தம்முள் நட்பாடி இன்னவிடத்தில் இன்னவாறு செய்தன என்று அவற்றின் இயல்புக்கு ஒவ்வாத, வகையில் இபைத்துரைக்கப்பெற்றுக் கதையளவாய் வழங்கும் உரைகடை. பொருளொடு புணர்க்த நகை மொழி என்பது: போப்யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகைப்பொருள் அளவாப் வருவது. அஃதாவது, முழுதும் பொப் என்று தள்ளப்படும் கிலை யிலமையாது உலகியலாகிய உண்மை நிலையை ஒருவாற்றான் அறிவுறுத்துவனவாய்க் கேட்போருக்கு நகைச்சுவையை விளைவிக் கும் பஞ்ச தந்திரக் கதை போலும் உரைகடை. பிசி என்பது புதிர் அல்லது விடுகதை’ என்று கருதலாம். இஃது ஒப்புமைத் தன்மையொடு பொருந்திய உவமப் பொருளும், ஒன்று சொல்ல மற்றொன்று தோன்றுக் துணிவுபட வரும் சொல் கிலையும் என்று இருவகைப்படும். ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும் தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைததே பிசிநிலை வகையே.48 என்பது தோல்காப்பிய நூற்பா. யானை செல்லும் என்று. வெளிப்படையாகச் சொல்லாமல் பிறை கவ்வி மலை கடக்கும்’ என உவமானத்தால் குறிப்பிற் புலப்பட வைத்தலே ஒப்பொடு புணர்ந்த உவமம் என்பது.

  • சோடான் பார்ப்பான் திறஞ்செய்யான் நீராடில்

ஊராடும் நீரிற் காக்கை” என்பது நெருப்பு’ என்னும் பொருள் குறிப்பில் தோன்ற அமைந்த 15 பண்டைக் காலத்தில் வழங்கி வந்த சிறுகதைச் செல் வத்தை'த்தான் இவ்வாறு தொல்காப்பியர் குறிப்பிட்டார் எனக் கருதலாம். 16. செப்பு - நூற். 159 (இளம்.)