பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற குறளில் இதனை நிறைமொழி எனக் குறிப்பிடுவர் வள்ளுவப்பெருக்திகை, சிறை மொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அன்வப்பொருள்களைப் பயந்தே விடும் மொழி' என்பர் பரிமேலழகர். எனவே, மறைமொழி என்பதற்கு நிறை மொழி மாக்தாது ஆனையின் ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே மறைத்துக் கொண்டுள்ள மொழி எனவும் பொருள் கொள்ளுதல் பொருந்தும். இதையே, ஆசிரியர் தொல்காப்பியர் பிறிதோரிடத்தில், வாய்மொழி” என்ற பெயரால் குறிப்பிடுவர். திருவாய்மொழி, திருமொழி என்ற பெயர்கள் இப்பெயர் வசிக் கத்தை அடியொற்றி அமைந்தவையாகும். எனவே, சபித்தற் பொருட்டாகிய மந்திரச் செய்யுளை அங்கதப் பாட்டெனவும், வசைப் பொருட்டாகாது உலக கலங்குறித்து வரும் மறைமொழியினையே மந்திரம் எனவும் வழங்குதல் தொல்காப்பியனார் கருத்தென்பது ஈண்டு அறியத்தககது. திருமூலரின் திருமந்திரத்தைச் சிறந்த மந்திர இலக்கியமாகக் கொள்ளலாம், எழுத்தின் இயல்பினாலும் சொல்லின் தொடர்ச்சியாலும் புலப்படாது, சொல்லினால் உணரப்படும் பொருட்குப் புறத்தே பொருளுடைத்தாய் நிற்பது குறிப்பு மொழி ஆகும் ; இதுவே *கூற்றிடை வைத்த குறிப்பு’ என்பது, எழுத்தொடும் சொல்லொடும் புனரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப." என்பது தொல்காப்பியம். கவியால் பொருள் தோன்றாது பின்னர் இன்னது இது எனக் குறிப்பினால் உய்த்துணர்ந்து சொல்ல வைத்தலின இது குறிப்பு மொழி எனப்பட்டது. பாட்டிடைப் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக்கொண்டு உனசினல்லது இக்குறிப்பு புலனாகாது என்பதை உணர்த்தவே, இதனைக் கூற்றிடை வைத்து குறிப்பு’ என்றார் ஆசிரியர். ஒருசார் ஆசிரியரால் இது பொருளிசை என்றும் வழங்கப்பெறும். இதற்கு, குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கின மூக்கின. ராம்: என்ற எடுத்துக்காட்டு தருவர் பேராசிரியர். இதனுள் குடமே தலையாகப் பிறந்தார் எனவும், கொம்பெழுந்த வாயினர் எனவும், 2பொட்டுரை நூலே வாய்மொழி பிசியே (செய்யு - நூற். 75.) 21. செய்யு - நூற். 172 இளம்.!