பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3இதி தொல்காப்பியம் காட்டும் வாழ்க் ைஇ. பண்ணிற்கு இலக்கணப் பாட்டாகி வந்தமையின் பண்ணத்தி பாயிற்று” எனவும் இளம்பூரணர் கூறிய விளக்கம் ஈண்டு நோக்கத் தக்கது. பண்ணத்தி என்னும் இவ்விசைப்பாடல்களின் அடியளவின் பேரெல்லை பன்னிரண்டு அடியாகும் : இவற்றின் அடி காற்சீரினும் மிக்கும் குறைந்தும் வரினும் கடியப்படாது. இதனை, அடிகிமிர் கிளவி ஈராறு ஆகும் அடியிகந்து வரினும் கடிவரை யின்றே.* என்ற நூற்பாவினால் அறியலாம். மேற்கூறியவை யாவும் அடிவரையறையில்லாத செய்யுளின் விகற்பங்களாகும். அஃதாவது, அவற்றின் அளவியல்" உணர்த்தப் பெற்றவாகும். வாழ்க்கையின் கோக்கம் : இவ்வுலகத்தில் நாம் கல்வி பெறும் நோக்கம் வையத்தில் வாழ்வாங்கு வாழ வழிவகுத்துக்கொள்வதற். காகவே என்பது இககாலக் கல்வி அறிஞர்களின் கொள்கை. பண்டைப் பெருமக்களது கொள்கையும் இதுவேயாகும். "அறம்பொருள் இன்பம்வீ டடைதல் நூற் பயனே.” என்ற கன்னுாற் பாயிர நூற்பா இதனை கன்கு வலியுறுத்தும். தொல்காப்பியரின் குறிக்கோளும் இதுவே. செய்யுள்களைப் பற்றிப் பேசுங்கால் அவர் இக்கருத்தினையே கூறியிருப்பதை மேலே குறிப்பிட்டோம். இவ்வுலகிலுள்ள மக்கள் அனைவரும் பொருள் பெற்று, அறம் புரிந்து, இன்பம் துய்த்து வாழ்வார்க ளாயின், அவர்கட்கு இவ்வுலகமே வானுலகமாகும். வீடு என்னும் சொல்லின் பொருளான விடுதலை’ என்பதைப் பெற்ற உலகமாகும்: இதுவே பழந்தமிழரின் கருத்து. எனவே, பண்டையோர் எழுதிய நூல்கள் யாவும் வாழ்விற்கு வழிகோலுவதாகவே அமைந்திருக்தன. நூல்களின் பிரிவு : பண்டையோர் எழுதிய நூல்கள் முதல் நூல், வழி நூல் என்ற இரு பிரிவினுள் அடங்கும். இதனை ஆசிரியர் தொல்காப்பியனார், - 24. செய்யு. நூற். 175 இளம்.) 25. செய்யுளின் பன்னிரண்டாவது உறுப்பு. 25. கன்னுரல் - நூற். 10