பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள் - 2 373 3. 29. மெய்ப்பாடு யாதானும் ஒன்றைக் கூறியவழி அதனை ஆராய்க் துணர்தலின்றிச் செய்யுளிடத்து வந்த அப்பொருள் தானே வெளிப்பட்டுத் தோன்றினாற்போன் து கண்ணிரதும்.:ல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்ப்பாடு தோன்றுமாற்றால் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடு என்னும் உறுப்பாகும். இது ககை முதலிய எண் வகை மெய்ப்பாட்டு கெறியினையும் பிழையாதாகி, மேல் மெய்ப்பாட்டியலில் சொல்லப்பட்ட இலக்கணத்தையுடையதாம் என்பர் ஆசிரியர். எண்வகை இயனெறி பிழிையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின இதுவே." என்ற நூற்பா இதனை விளக்கும். உரன்கெரிந்து விழி என்னை யுதைத்துருட்டி மூக்கரிந்த நான் இருந்து தோள்பார்க்க நான்கிடந்து புலம்புவதோ ? கரன் இருந்த வனம் அன்றோ ? இவைபடவும் கடவேனோ ? அரன் இருந்த மலைஎடுத்த அண்ணாவோ : அண்ணாவோ?* எள்ற பாடலில் அழுகை என்ற மெய்ப்பாடு (தன்கண் தோன்றிய அவலம், புலப்பட வந்தவாறு கண்டு கொள்க. மெய்ப்பாடுபற்றிய செப்திகள் முன்னர் விரித்துரைககப்பட்டன. " “கவிப்பொருள் உணர்ந்தால் அதனாலே சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடு என்றான். அது தேவருலகம் கூறினும் அதனைக் கண்டாங்கு அறியச் செய்தல் செய்யுளுறுப்பாம். நோக்குதுப்பால் உணர்ந்த பொருட்பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடென்பது இதன் கருத்து. இக்கருத்தினாற் கவி கண் காட்டும் எனவும் சொல்லுப” என்று பேராசிரியர் கூறிய விளக்கம் எண்ணி மகிழத்தக்கது. - . స్క్లో 21. எச்சம் : கூற்றினாலும் குறிப்பினாலும் எஞ்சி கின்று: பின் கொணர்ந்து முடிக்கப்பெறும் இலக்கணத்தொடு பொருக்தியது. எச்சம் என்னும் உறுப்பாகும். எனவே, கூற்றெச்சம், குறிப்பெச்சம் என எச்சம் இருவகையாயின. 13. செய்யு - நூற். 197 (இளம்.) 14. ஆரணி . சூர்ப்பனகைப் 109. 15. இந்நூல் (21 - 24) கட்டுரைகளில்.