பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய வனப்பு 3శి$' காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வழங்கி வருதல். பழமைபழங்கதை. அவை இராம சரிதமும், பாண்டவ சரிதமும் முதலாய வற்றின்மேல் வருஞ்செய்யுள் என்பர் இளம்பூரணர். இனி, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையொடு புணர்ந்த" என்ற தொடருக்கு உரைகடையுடன் விரவிய' எனப் பொருள்கொண்டு, பெருங்தேவனாரால் பாடப்பட்ட பாசதமும் தகடுர் பாத்திரையும் சிலப்பதிகாரமும் போல் அமைந்த உரையிடை யிட்ட செய்யுள்களைத் தொன்மை’ என்ற வனப்புக்கு எடுத்துக் காட்டுகளாகக் குறித்துள்ளனர். இவற்றுள் இப்பொழுது வழக்கிலுள்ளது சிலப்பதிகாரமாகும். அஃது ஒரு சிறந்த காப்பீயம். அதன் இடையிடையே உரை வந்துள்ளமையின், அதற்கு உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யு'ளென்ற ஒரு பெயரும் வழங்கி வருகின்றது. தொல்காப்பியர் காலத்தே உரையிடையிட்ட பாட்டுடைத் தொடர்கள் மிகுதியாக வழங்கின என்று ஊகம் செய்ய இடம் உள்ளது. இல்லையெனின், அவற்றைத் தனியே ஒரு பிரிவாகப் பிரித்துக் கூறாது. பின்வருவனவற்றோடு சேர்த்துக் கூறியிருத்தல் கூடுமன்றே உரையின் இலக்கணம் வகுக்கும் பொழுதும் தொல்காப்பியர் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளை கினைவுறுத்துவது ஈண்டு சிந்திக்கத்தக்கது. முற்காலத்திருந்த உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்களின் பெயர்கள் கூட இப்பொழுது தெரிந்தில. பிற்காலத்தெழுந்த பார்தமொன்று உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைக்துள்ளது. அது சபாரத வெண்பா' என்று வழங்கும். 4. தோல் : இழுமென்னும் ஒசையையுடைய மெல்லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், பரந்த மொழியால் அடிகிமிர்ந்து வரத் தொடுப்பினும் தோல் என்னும் செய்யுளாம். இழுமென் மொழியால் விழுமியது துவலினும் பரந்த மொழியால் அடிநிமிரங் தொழுகினும் தோலென மொழிப தென்மொழிப் புலவர். ' என்பது தொல்காப்பியரின் விதி. 15 செப்நெற். 230 (இளம்) தோல்.--25