பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய வனப்பு - - - 387 வழக்கமாகக் காணப்பெறுவது. பொருள் தொடர்ந்து வருவதற்குக் கதையே மிகவும் ஏற்றது. இதனை விரிக்கும் வழி விரிக்கலாம் : தொகுக்கும் வழித் தொகுக்கலாம் : பலவகைச் சொற்பொருள் இயங்களையும் அமைத்திடலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் காற்பொருளையும் கதையின் அமைத்துக் காட்டலே கவர்ச்சியைத் திரும் : படிப்போர் மனத்திலும் பசு மாத்தாணியைப் போல் பதியும். காவியமானது மனைவியின் உரைக்கு இணை பாகும் என்பர். கணவனுக்குத் தனது கருத்தையறிவிக்கப் புகும் மனைவி, மிக இனிய சொற்களால் மனங்கவரும் முறையில் மெல்ல அறிவித்தலைப் போல், காவியங்கள் உயர்ந்த அறகெறிப் பொருள் கனைச் சொற்பொருள் இயங்களோடு மனம் கவரும் வண்ணம் புலப் படுத்துகின்றன. எனவே, காப்பியம் கதை மேல் படர்வதாயிற்று. பழைய கதைகளைக் காப்பியங்களாக அமைக்கும் பயிற்சி தண்டமிழ் காட்டில் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே இருந்த தென்பதும், அதுபற்றியே தொல்காப்பியர் இவ்விலக்கணம் அமைத்தனர் என்பதும் அறியக் கிடக்கின்றன. பிற்காலத்தில் சமணர்களுக்குள் வழங்கி வக்த பழங்கதையைச் சீவக சிந்தாமணி என்னும் காப்பியமாகத் திருத்திக்க தேவர் இயற்றியமையை நோக்குக. 5. விருந்து விருக்தென்பது, புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது. விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே: என்பது ஆசிரியர் கூறும் விதி. “புதிதாகப் புனைதலாவது, ஒருவன் சொன்ன கிழில்வழியன்றித் தானே தோற்றுவித்தல்: என்பர் இளம்பூரணர். ‘புதுவது கிளக்த யாப்பின் மேற்று' என்ற தென்னையெனின்,-புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச்செய்வது. அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினேசர் செய்தி அக்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலாயினவும் சொல்லுட' என்று விளக்குவர் பேராசிரியர். - - 羈 முற்கூறிய தோல் என்பது பழைய கதையைப் புதிதாகக் கூறலென்றும், ஈண்டுக் கூறிய விருக்தென்பது பழையதும் புதியதுமாகிய கதைமேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர்கிலைச் செய்யுள் செய்வதென்றும் இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டினை விளக்குவர் கச்சினார்க்கினியர். T1 செப்நூெற். 231 இளம்.)