பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை புதுமைக் கதைகளை இக்காலத்தார் புதினம்’ (Novel) stop பெயரால் குறிப்பிடுவர். விருந்து என்பது அப்புதினத்தைக் குறிப்ப தாகக் கொள்ளுதலால் இழுக்கொன்றுமில்லை, புதிய புதிய கதைகளை அமைத்துப் புதிய புதிய காப்பியங்களை இயற்றும் வழக்கு மற்ற மொழிகளில் விரிவாகக் காணப்பெறுகின்றது. ஆங்கில காடகக் காப்பியங்களில் பெரும்பாலன இம்முறையில் தான் அமைத்தன. தமிழ் மொழியில் பிற்காலத்தில் இத்தகைய காப்பியங்கள் இயற்றப்பெறாவிடினும் தொல்காப்பியர் காலத்தில் அவை இருந்தனவென்றே கொள்ளுதல் வேண்டும். இக்காலத்தில் பாரதியார் இயற்றியுள்ள "பாஞ்சாலி சபதம்’, பாரதிதாசன் படைத் துள்ள பாண்டியன் பரிசு போன்ற காப்பியங்களை விருந்து" என்னும் தலைப்பில் அடக்கலாம். - 8. இயைபு : ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை இறுதியாகக் கொண்டு பொருட் டொடராகவும் சொற்றொடராகவும் முடியும் செய்யுள் இயைபு' எனப்படும். ஞகார முதலா னகார ஈற்றுப் புள்ளி இறுதி இயைபெனப் படுமே. ” என்பது தொல்காப்பிய விதி. னகாச சற்றான் இற்றதற்குச் சித்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையையும், கொங்கு வேளிராற் செய்யப்பட்ட பெருங்கதையையும் எடுத்துக் காட்டுகளாகக் காட்டுவர் பேராசிரியர். பரந்த மொழியால் அடி திமிசக்தொழுகிய தோல் என்பன பெரும்பான்மையும் உயிரீற்ற தாப் வருதலும், இயைபு ஈண்டுக் கூறிய மெய்யீற்ததாப் அவை வருதலும் தம்முள் வேற்றுமையாகும். இவண் கூறிய நூற்பா பொருட்டொடர் கிலையில் ஒவ்வொரு பாட்டின் இறுதியும் அமைந்த முறைபற்றி வகுக்கப்பெற்றது. இப்பொழுது னகர ஈற்றால் இற்ற காப்பியங்களே அறியப் பெறுகின்றன ; அவை பும் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் எழுந்தவை. இந்நூற்பாவில் கூறிய இலக்கணத்திற்கு இலக்கியம் அவர் காலத்திற்கு முன்னரே வழங்கியிருத்தல் வேண்டும். இக் கருத்தையுட்கொண்டே, மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் ஈண்டு இலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கொள்க : இப்பொழுது அவை வீழ்ந்தன போலும்” என்று பேராசிரியரும், "ஒழிந்த ஒற்றுகளுக்கும் இலக்கணம் உண்மையின் இலக்கியம் 12. செய்யு. நூற். 232 (இளம்.)