பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய வனப்பு 38.9 இக்காலத்து வீழ்ந்தன போலும்’ என்று கச்சினார்க்கினியரும் கூறினர். "இயைபு' என்ற பெயரை கினைந்து சொல் இயைபையும் இலக்கணகாக அமைத்தனர் உ;ை பாசிரியர்கள். இயை’ பென்றதனானே போருளும் இயைந்து சொல்லும் இயைக் து வரும் என்பது கருத்து’ என்பர் பேராசிரியர். அவ்வியைபு செய்யுளந்தாதி என்றும், சொற்றொடர் கிலை என்றும் சொல்லப்படும். அக்தாதி, கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் சொற்றொடர் நிலைகளாகும். அவற்றில் சொல் மாத்திரம் தொடர்ந்து வந்திருக்கும். பொருட்டொடர் சிலைக்கண் இச்சொற்றொடர்ச்சி அமைந்ததற்கு உதயணன் கதையை எடுத்துக்காட்டாகக் கொள்க. கலியாணன் கதை என்பதும் அத்தகையதே." - 7. புலன். பலருக்கும் தெரிந்த வழக்கச் சொல்லினாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டுக் குறித்த பொருள் இதுவென ஆராய வேண்டாமல் தானே விளங்கத் தோன்றுவது புலன்' என்னும் செய்யுளாம். சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்க் தோரே.* என்பது ஆசிரியர் கூறும் விதி. சேரி மொழியைப் பாடி மாற்றங்கள்’ என்று குறிப்பர் பேராசிரியர். அவற்றிற்கு எடுத்துக்காட்டாக *விளக்கத்தார் கூத்து’ முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுளைக் கூறுவர் அவர். திரிசொல்லன்றி எளிதாகச் செய்யப்படுவது புலன் ஆகும் என்பது யாப்பருங்கல விருத்தியாசிரியர் கொள்கை. நாடகச் செய்யுளில் கூற்றுக் குரியாருக்கு ஏற்றவாறு சொல் அமையவேண்டிச் சேரிமொழி விரவி வருதல் வேண்டும். வடமொழி நாடகக் காப்பியங்களில் பாகதம்" விரவி வருதலைப் போல இதனைக் கொள்ளலாம். 8. இழைபு : "இழைபு’ என்பது, :இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தது” என்பது , அஃதாவது, இஃது ஒருவகை இசைப்பாட்டாகும். 13. பா. வி - பக். 195. 14. செப்யு - நூற். 233 (இளம்.)