பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ஒற்றொடு புணர்க்க வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐக்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின் இழையின் இலக்கணம் இயைந்த தாகும்." என்பது தொல்காப்பிய விதியாகும். ஒற்றோடு புணர்ந்த வல்லெழுத்துப் பயிலாமல் குறளடி முதல் ஐந்தடியினையும் ஒப்பித்து ஓங்கிய மொழியால் பொருள் புலப்படச் செய்வது "இழைபு என்னும் வனப்பாகும். இழைபாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தது எனவும், இவை கதேர்தல் வேண்டாது பொருண் இனிது விளங்கல் வேண்டும்" என்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி எனவும் பேராசிரியர் கூறிய விளக்கம் அறியத்தக்கது. - மேற்கூறியவை யாவும் தொல்காப்பியத்தில் கண்ட காப்பிய வளப்புபற்றிய செய்திகளாகும். வடமொழியில் காப்பிய இலக்கணங் க்ளை விளக்கும் நூல்களில் பெரும்பாலும் காப்பியத்தின் பொது இலக்கணம், காப்பியங்களின் வகை, காப்பிய்த்தில் அமையும் அணிகள், சுவைகள், குணம், குற்றம் என்பன ஆராயப்பெறு கின்றன. தமிழ் நூல்களில் இங்த முறை இல்லாவிடினும் இத்தகைய இலக்கணங்கள் ஆங்காங்கே கூறப்பெறுகின்றன. காப்பிய இலக்கணம் பற்றிய ஒரு தனி இலக்கண நூல் தமிழ் மொழிக்கு மிகவும் இன்றியமையாதது, SAASA SAASAASSAAAAA AAAA SAAAAAMMAAAS 15. செப்பு - நூற். 234 (இளம்.)