பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சொற்பொருள் மரபுகள் - (1) மொழி சொற்களால் ஆனது சொற்கள் யாவும் பொருள் களை உணர்த்தும் குறியீடுகளாம். சொல்லுவோனது உள்ளக் கிடக்கையைக் கேட்போன் சரியாக உணரவேண்டுமாயின் சொற் களின் பொருளை இருவரும் கன்கு தெரிந்திருத்தல் வேண்டும். பண்டைக் காலத்தில் எவ்வாறு சொற்களுக்குப் பொருள் வழங்கி னார்களோ, அந்த மரபு கெடாது அச்சொற்களை வழங்கி வசல் வேண்டும். அம்மரபு திரிய அச்சொற்கள் வழங்கப்பெறுமாயின், இவ்வுலகத்துச் சொற்களெல்லாம் பொருளிழந்து பிறிது பிறிதாகும் என்பது தொல்காப்பியனாரின் கருத்தாகும். -

  • மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும். i.

என்பது தொல்காப்பிய நூற்பா. தொன்றுதொட்டு உயர்க்தோர் - அறிஞர்கள் - சொற்களை வழங்கி வக்த முறையே "வழிககு" என்பது. காரணம், உலகத்து கிகழ்ச்சிகள் யாவும் அவர்களையே நோக்ஓ நிற்கின்றன. வழக்கெனப் படுவதுயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான ? என்று இதனை விளக்குவர் தொல்காப்பியனார். இதனையே பின் வக்தோர், - எப்பொரு ளெச்சொலின் எவ்வா றுயர்த்தோர் சேப்பின ச் அப்படிச் செப்புதல் மரபே." என்று விளக்குவர். உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இரு வகை வழக்கிலும் கெடுங்காலமாகப் பயின்று வழங்கும் மரபுச் சொற்கள் உயர்திணை, அஃறிணை என்ற இருதினையும் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் என்ற ஐம்பாலும்பற்றி வரும் பொருள்களின் இளமைத்தன்மை, ஆண்மை, பெண்மை முதலிய இயல்புகளைப் புலப்படுத்தும் மெசதொற். 98 இளம்.) ஷை - நூற். - 94 (இனம்.) நன்னுரல் - நூற். 388.