பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் மரபுகள் - (1) 393: பழ்ை, பன்றிப் பிள்ளை என வரும். இவ்வாறு ஒட்டி ஏனைய வற்றையும் காண்க. பாடு, குதிரை, கவ்வி (புள்ளிமான்), உழை, புல்வாப் என்று. சொல்லப்பெற்ற ஐந்தும் மறி என்ற இளமைப் பெயரை உடையன. மடலுடையன கவ்வி எனவும், இடை கிகான உழை எனவும் கொள்க’ என்று கூறுவர் பேராசிரியர். மரக்கிளையினையே வாழுமிடமாகக் கொண்ட குரங்கும் "குட்டி என்று வழங்கப்பெறும். மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்ற நான்கு பெயர்களும் குட்டி" என்பது போல அக்குரங்கின் பகுதிக்கு உரியனவாகும். இவற்றை, கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப.” "மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான”. என்ற நூற்பாக்கள் துவலும். கோடுவாழ் குரங்கு என்பதனால்ல அதன் இனமாகிய ஊகமும், முகவும் குட்டி என்ற பெயர் பெறும் எனக் கொள்வர் இளம்பூரணர். அவை குரங்குக் குட்டி முகக்குட்டி, ஊகக்குட்டி என்று வரும். கோடுவாழ் குரங்கும்’ என்பதில் உம்மையை இறந்தது தழி இயிற்றாகக்கொண்டு மேற்கூறிய யாடு, குதிரை, கவ்வி, உழை, புலவாய் என்னும் ஐந்து சாதிக்கும் குட்டி’ என்னும் பெயர் கூறப்படும் என்பர் பேராசிரியர். அவை பாட்டுக் குட்டி, குதிரைக்குட்டி, கவ்விக் குட்டி, உழைமான் குட்டி, புல்வாய்க்குட்டி என வரும். - யானை, குதிரை, கழுதை, கடமை, மான்,' எருமை, insTog', கவரி, கராகம் (கரடி, ஒட்டகம், என்பன கன்று என்ற இளமைப் பெயரையுடையன. அவை யானைக் கன்று, குதிரைக் கன்று. கழுதைக் கன்று, கடமைக் கன்று, மான் கன்று, எருமைக் கன்று, மரையான் கன்று, கவரிமான் கன்று, காரக் கன்று, ஒட்டகக் கன்று என வரும். . யானை, ஆ, எருமை, கடமை, மசை, குரங்கு, முசு, ஊகம் என்றவற்றிற்கு குழவி என்ற இளமைப் பெயர் உரியது. மேற்குறித்த இளமைப் பெயர்கள் ஒன்பதில் குழவி, மகவு என்ற இரு பெயர்களைத் தவிர ஏனைய பெயர்கள் மக்களுக்கு. 5. மரபி . நூற். 13, 14 (இளம்.) 6. ஆன்கன்று - என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 7. கராம் . முதலை என்று பாடம் கொள்வர் பேராசிரியர்.