பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39.தி - தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை உரியனவாக வழங்கப்பெறுதல் இல்லை என்பது தொல்காப்பியரின் கருத்து. ஆண் பிள்ளை, பெண்பிள்ளை, எனப் பிள்ளைப் பெயரும் மக்கட்பாற்படுவன கொள்க’ என எதிரது போற்றிக் கொள்வர் பேராசிரியர். பிள்ளை, குழவி, கன்று, போத்து என்ற கான்கு பெயர்களும் ஒசறிவுயிர்கட்கு உரியவைாப் வழங்கும் இளமைப் பெயர்களாகும். பிள்ளை குழவி இன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் ஒரறி வுயிர்க்கே. 8 என்பது தொல்காப்பிய நூற்பா. இவ்விளமைப் பெயர்கள் தெங்கம் பிள்ளை, கமுகங் கன்று, கருப்பம் போத்து என வரும். ஒசறிவுயிர்க்கட் குழவி என்பது வந்தவழி கண்டு கொள்க. கொள்ளவும் அமையும்’ என்ற உம்மையை எச்சப்படுத்தும் பிறவழியும் கொள்ளப்படும் என்று கூறி குழவி வேனில், குழிவித் திங்கள், குழவி ஞாயிறு என்பன போன்ற இலக்கிய மேற்கோள் சிகளைக் காட்டுவர் பேராசிரியர். இந்த கான்கு பெயர்களாலும் கெல்லும் புல்லும் குறிக்கப் பெறுதல் இல்லை. - இவ்வாறு இளமைப் பெயர்களைக் குறிப்பிட்டவற்றைத் தவிர வேறில்லை என்றும் அறுதியிடுவர். - சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே." என்ற நூற்பாவால் இதனை அறியலாகும். அவை பல்லது பிறவில்லை’ என்றமையின் ஒன்றற்குரியவற்றை ஒன்றற் குரியவாக்கி வழங்குவனவும் சிறுபான்மை கொள்ளப்படும். சிங்கத்திற்குப் புலிக்குரியதும், உடும்பு, ஒக்தி, பல்லி என்பவற்றுக்கு அணிலுக்குரியதும், நாவிக்கு மூங்காவிற்குரியதும் இவ்வாறே பிறவும் இவ்வகையின் ஏற்பனவெல்லாம் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். சொல்லுங்காலை என்றதனால் சொல்லாத நாகு" முதலிய இளமைப் பெயரும் தழுவிக்கொள்ளப்படும் என்பச் பேராசிரியர். இந்த இனமைப் பெயர்களில் பல சிலப்பதிகாரத்தில் ஒருசேரக் காணப்படுகின்றன. மலை வளங் காணச் சென்ற செங்குட்டுவன் முன்னர் மலைக்குறவர் காணிக்கைப் பொருள்களுடன் திறை 8. மரபி. - நூற். 24 (இளம்.) 9. டிை- நூற்பா 26 (இளம்.)