பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சொற்பொருள் மரபுகள் - (2) தொல்காப்பியர் கூறியுள்ள இளமை, பேண்மை, ஆண்மை பொருண்மைகளைப்பற்றிய மரபுகளை முன்னர்க் கண்டோம். இனி, எஞ்சியுள்ள ஒரறிவுயிர்களுக்குரிய சொல் மரபுகளையும் கால்வகைச் சாதிபற்றிய மரபுகளையும் ஈண்டுக் காண்போம். தாவரப் பெயர்கன் (புல், மரம்) : புறத்தில் வயிரமுடைய பனை, தெங்கு, கமுகு முதலான புல்” என்றும், அகத்து வயிரமுடைய இருப்பை, புளி, ஆச்சா முதலாயின மரம் என்றும் வழங்கப் பெறும். புறக்கா ழனவே புல்லென மொழிப' அகக்கா ஒனவே மரமென மொழிப ! என்ற துரற்பாக்கன் இதனை உணர்த்தும். தோடு, மடல், ஒலை, எடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை எனக் கூறப்பெற்ற உறுப்பின் பெயர்களும் இவற்றை யொத்த பிறவும் புல் வகையைச் சார்ந்து வரும். இதனை, தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாள்ை என்றா ஈர்க்கே குலையே கேர்த்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.2 என்ற நூற்பாவால் அறியலாம். புற வயிர்ப்பும் உள் வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் வாழை, ஈக்து, தாமசை, கழுர்ே முதலிய ஒரு சாசன இவ்வகைப்பட்ட உறுப்புப் பெயருடையனவாகி இவையும் புல்லெனப் படும் என்பர் இளம்பூரணர். பிறவும் என்றதனால் குரும்பை, துங்கு, நுகும்பு, போக்தை என் நற்தொடக்கத்தனவும் புல்லின் உறுப்பாகக் கொள்ளப்படும். து.கும்பு - மடல் விரியாத குருத்து புறம் - 249). போக்தை - பனங்கருக்கு. மரத்தின் உறுப்புப் பெயர்கள் இலை, தளிர், முறி, தோடு, சினை, பூ, அரும்பு, நனை முதலாகச் சொல்லப்பட்டனவும். 1. மரபு - நூற். 86, 87 இனம்.) 2. தை - நூற். 88இளம்)