பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. அறுவகை உயிர்ப் பாகுபாடு இவ்வுலகிலுள்ள உயிர்கள் யாவும் புலன்கள் வாயிலாகவே வெளியுலக அறிவினை - சூழ்நிலையைப்பற்றி: தகவல்களை - அறிகின்றன; புலனுணர்ச்சிக்கு’ அடிப்படையாக இருப்பவை உயிர்ப்பிராணிகளிடம் அமைந்துள்ள பொறிகளாகும். உயிர்ப் பிராணிகளின் உடல்கள் செயல் திறம் வாய்ந்தவை. பொறிகள் அனைத்தும் அவற்றிடம் ஒரு தாக்கலை அல்லது அதிர்ச்சியை உண்டாக்குகின்றன; அஃதாவது, தூண்டல்களை எழுப்புகின்றன. இத்துரண்டல்கள் பொறிகளைத் தாக்கிக் கொள்வாய்கள் மூலம் கரம்பு மண்டலத்தை அடைகின்றன: நரம்புத் தொகுதிகள் வழியாக {பொருத்துவாய்கள், நரம்புத் துடிப்புகள் மூளையை அடைந்து அங்குப் புலப்பாடுகளை உண்டாக்குகின்றன. பிறகு, இத்துடிப்பு கள் தசை அல்லது சுரப்பிகளில் (இயங்குவாய்களில்) செயல்களை எழுப்புகின்றன. உயிர்ப்பிராணிகள் அவற்றிற்கேற்பத் துலங்கு கின் ஆன. ஒர் எடுத்துக்காட்டு இதனைத் தெளிவாக்கும். பள்ளிச் சிறுவன் ஒருவன் பள்ளித் தோட்டத்தில் அருகெல்லிக் கணிகளைக் கானகின்றான். கனிகளைக் கண்கள் (கொள்வாய்) கண்டதும், இத் தாக்கல் மூளைக்குச சென்று, மூளையின் நடுவிடத்தின் (பொருத்து வாய்) துணையால் கைகளின் திசைகளை (இயங்குவாய்) இயக்கு வித்துக் கனியைப் பறிக்கச் செய்கின்றது : வாயிலும் உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. எல்லா மனச் செல்களும் பொறிகளின் துண்டல்களால் நடை பெறுகின்றனவாதலின். உயிர்களின் வாழ்க்கையில் பொறிகள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இவற்றின் செயல்கள் யாவும் பொறிகளைப் பொறுத்தே அமைகின்றன. இவை பெறும் அறிவு முழுவதும் நேர் முறையிலோ, அன்றி கோல் முறையிலோ பொறி வாயிலாகப் பெறும் செய்திகளின்மீது எழுந்ததேயாகும். வெறும் புலனுணர்வு மட்டிலும் அறிவன்றெனினும், புலனுணர்வினை அடிப் படையாகக் கொண்டே அறிவு மலர்கின்றது. மக்களாகிய நாம் 1. go - Environment. 2. Liaogy wriáš - Sensation 3. zr:rı-sö - Stimulus. 4. Dzisirsirüssi - Receptors 5. Gruffeg # 5 uzlů ssir - Connectors, 6. @uśgsurlü ssir - Effectors.