பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுவகை உயிாபபாகுபாடு ・針運7 மன உணர்வுபற்றி ஆராய்ச்சி பாவ்லோவ் என்ற இரஷ்ய அறிஞரும், வாட்சன்' என்ற அமெரிக்க அறிஞரும் கற்றல் அனைத்தும் மறிவினைச் செயல்களின் தொகுதி என்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு நாயின் வாயில் உணவு சேர்ந்தவுடன் உமிழ்ர்ே ஊறுதல் இயற்கை மறிவினையாகும். உணவிடும் போதெல்லாம் ஒரு மணியோசையை எழுப்பி வங் த ல் உணவிடுதலும் மணியோசையும் இயைபு பெற்று முற்கூறிய துரண்டலின் துலங்கலாகிய உமிழ்நீர் ஊறுதல், பிற்கூறிய துரண்டலின் துலங்கலாகிவிடுகின்றது. உணவின்றி ുങ്ങി யோசையை மட்டிலும் எழுப்பினாலும் நாயின் வாயில் உமிழ்ர்ே ஊறுகின்றது. இதைக் கற்ற மறிவினை” அல்லது ஆக்க மறிவினை' என்பர் உளவியலார். மனிதரிடமும் இத்தகைய ஆக்கமறிவினைகள் ஏற்படுகின்றன. ஒரு தாய் ஒரு குழந்தையிடம் பக்தைக் கொடுத்தால், அஃது அதனைத் தடவிப் பார்க்கின்றது. அப்போதே, பங்து, பந்து என்று அவள் உரைத்தால் அதுவும் அப்பெயரை அப்பொருளுடன் தொடர்புறுத்தி, அதனைக் கண்ட பொழுதெல்லாம் பந்து’ என்கின்றது. இங்ஙனமே, ஆக்கமறிவினை முறையில் மொழியறிவு உண்டாகின்றது. இவ்வாறே நம் விருப்பப் பொருள்களும், வெறுப்புப் பொருள்களும், அச்சம் போன்ற உள்ளக் கிளர்ச்சிகளும் அமைகின்றன என்பர் உளவியலறிஞர்கள். இவ் வுண்மையிலிருந்தும் மக்களின் கீழான உயிர்களிடம் மனிதனைப் போல் சிந்தனை, ஆய்தல் போன்ற செயல்களைப் புரியும் மனம் என்ற ஒன்று இல்லையென்றும் ஊகிக்க இடம் ஏற்படுகின்றது. கீழான உயிர்களின் மனம்பற்றிய ஆராய்ச்சிகளில் இன்னும் உளவியல் ஒருவிதத் திட்டமான முடிவுக்கும் வரவில்லை. புழுப்போன்ற சாதாரண பிராணிகளுக்கும் மூளை உள்ளது. சாதாரணமாக, ஒரு மனித மூளையின் எடை மூன்று இராத்தல்கள்: யானை மூளையின் எடை பத்து இராத்தல்கள் : திமிங்கல மூளையின் எடை பதினான்கு இராத்தல்கள். மனிதன் சிறந்த அறிவுடையவனாக இருப்பதற்கு மூளையின் அளவிலிருந்து ஊகிப்பதைவிட மூளையின் எடைக்கும் உடலின் எடைக்குமுள்ள விகித அளவு சரியான கருத்தேற்றத்தைத் தருகின்றது. 15. urtš Gaoirsii - Pavlov. 16, gumilo - Watson. 17. logólsstapso est @eral gò - Reflex action. 18, 435ips affanor -Conditional reflex. 19. gpo.gr - Brain. தொல்.--27