பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுவகை உயிர்ப் பாகுபாடு 419



பகுதிகள் பாலுணிகளிடம் மிகப்பரந்து காணப்பெறுகின்றன. மனிதனிடம் இப்பகுதிகள் அதிகமாக உள்ளன: Eாயிடமும் மனிதிக் குரங்கினிடமும் இப்பகுதிகள் அதிகமாக இருப்பினும் அவை இணைப்பு மையங்களாகச் செயற்படுபவை மிகக்குறைக்தே காணப் பெறுகின்றன, இந்த இணைப்பு மையங்களின் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பொறுத்தே மனிதன் ஆறறிவுடையவ னாகக் காணப்பெறுகின்றான். இதன் காரணமாகவே, மனிதனிடம் கற்றலும், கடத்தவற்றை நினைவுகூர்தலும், சிந்தனை செய்தலும் நடைபெறுகின்றன. பெருமூளைப் புறணியில் காணப்பெறும் அதிக மடிப்புகளுக்கேற்றவாறு மனிதன் அறிதிறன் மிக்கவனாகக் காணப் பெறுகின்றான் என்பர் உளவியலார். இவற்றையும் இவை போன்ற முழு விவரங்களையும் உள நூல்களில் கண்டு தெளிக29 இவண் விரிப்பிற் பெருகும்.

உயிர் வகைகள் : இனி, உயிர் வகைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம். உற்றால் அறிவதாகிய உடம்புணர்ச்சி (பரிச வுணர்ச்சி) யொன்றே உடையது (ஓரறிவுயிராகும். ஒரறிவுடைய உயிர்களைத் தொல்காப்பியர்,

புல்லும் மரனும் ஒரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.89



என்ற நூற்பாவால் விளக்குவர். புறக்காழனவாகிய புல்லும், அகக் காழனவாகிய மானும் ஒரறிவுடையன. பிற என்பன, புறக்காழும் அகக்காழும் இன்றிப் புதலும் கொடியும் போல்வன. "பயிலத் தொடுங்கால் புலருமாகலின் ஒரறிவுடையவென வழக்கு நோக்கிக் கூறினான்’ என்பர் பேராசிரியர்.

பரிசவுணர்ச்சியாகிய அதனுடன் சுவையறிதலாகிய நா வுணர்வும் உடையது ஈரறிவுயிராகும். இதனை,

கந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. 31

என்று கூறுவர் தொல்காப்பியர். “இரை சுவைக்கோடலும் பிறிதொன்று தாக்கிய வழி அறிதலும் உடைமையின், மெய்யுணர்

29. Munn, Norman, l: Psychology - Chap. 3. 30. மரபி - நூற். 28 (இளம்) 31. மரபி - நூற். 29 (இளம்)