பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 爱3盘 குறிக்கும். வேட்டையாடுவதில் வல்லமை, பகைவர்களை எதிர்த் துப் போர் புரிந்து வெற்றி பெறும் வீரத்தன்மை, தன்னலக் துறந்து மக்களின் கல்வாழ்வுக்காக உழைக்கும் உறுதியுள்ளம், நடுநிலை தவறாத நல்லொழுக்கமுடைமை, நீதி வழங்கும் நேர்மைக் குனம் - இவை போன்ற உயர் குணங்களையுடையவர்களே அரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றனர். இவர்களும் தனி வகுப்பினர் அன்று. இத்தகைய பேருமைகளைப் புறத்திணையியலில் பரக்கக் காணலாம். அக்தணர்கட்கு உரியவைகளும் அரசர்கட்கு உரியனவாக வரு தலும் உண்டு. அந்த னாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே." என்ற நூற்பாவினால் இதனை அறியலாம். அரச வாழ்வில் வெறுப்படைந்தவர்கள் அந்தணர் வாழ்வினைக் கடைப்பிடித்து அக்தணர்களாகவே வாழ்வர். வணிகர் : பழந்தமிழ் வணிகர்கள் கொள்வது உம் மிகை கொளாது கொடுப்பது உம் குறைகொடாது' நேர்மையுடன் வாணிகம் செய்யும் பண்புடையவர்கள். வாணிகம் செய்யும் தொழிலை வைசியன் பெறுவான் என்று தொல்காப்பியம் கூறு கின்றது. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை: என்பது தொல்காப்பிய மரபியல் நூற்பா. இவர்கள் உள்நாட்டிலும் வெளி காட்டிலும் பெருவாணிகமும் கூல வாணகமும் செப்து வந்த னர். கடல் கடந்த வாணிகமும் இவர்களிடமே இருக்தது. வாணிகத் துடன் தானியங்களை விளைவிக்கும் தொழிலையும் இவர்கள் மேற் கொள்வதுண்டு. - மெப்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான.49 என்ற நூற்பாவால் இதனை அறியலாம். இதுவும் வாணிகத்துடன் 7. மரபி, நூற். 73 (இளம்.) 8. பட்டினப். - அடி 210-11. 9. மரபி. - நூற் 78 இளம்.) 10. மரபி. நூற். 79 (இளம்.)