பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஒருதலை வேட்கையும் ஒப்பில் கூட்டமும் எழுவகையாகப் பிரிக்கப்பட்ட இன்பப் பகுதிகளில் ஐக்திணை பற்றி மேலே அறிந்தோம். எஞ்சிய இரண்டு பகுதிகளையும் ஈண்டுக் காண்போம். ஒன்று, ஒருபாற் காதல். அதை ஒருதலைக்காமம் என்றும் ஒருமருங்கு பற்றிய கேண்மை என்றும் கூறுவர். சூர்ப்பனகை இராமனைக் காதலித்தது இவ்வகையில் அடங்கும். இரண்டாவது ஒள்வாக் காதல்; பொருந்தாக் காமம். ஒருதலை வேட்கையைக் கைக்கிளை என்றும், ஒவ்வாக் கூட்டத்தைப் பெருந்தினை என்றும் தொல்காப்பியர் குறிப்பர். இவை இரண்டும் துப்மையான அகப் பொருள் ஆகமாட்டா. இவை அகத்துக்குச் சிறிது புறமாக இருப்பவை. ஆதலின் இவற்றை இலக்கண ஆசிரியர்கள் அகப்புறம் என்று குறிப்பிடுவது வழக்கம். தாமசையின் புற இதழ் போலவும், வாழைப்பழத்தின் தோல் போலவும் இவை அகப்பொருளில் அமைந் துள்ளன என்று கூறுதல் பொருந்தும்; அவ்வளவுதான். கைக்கிளை-பெயர்க்காரணம் கைக்கிளை என்பதை ஒரு பக்கத்தில் கிளைப்பதாகிய அன்பு என்று மேலே குறிப்பிட்டோம். கை என்பது பக்கத்தைக் குறிக்கும்: கிளை என்பது கிளைத்தல், தோன்றுதல். இளம்பூரணர், கை என்பது சிறுமையற்றி வரும் என்றும், கிளை என்பது உறவு என்ற பொருளில் வருக என்றும் கூறுவர். “பெருமையில்லாத தலை மக்கள் உறவு’ என்பது இதன் பொருள். கைக்குடை, கையேடு, கைவாள், கைத்தடி, கைக்குழந்தை, ைமாற்று, கையடக்கம், கை வண்டி, கைக்கடிகாரம் என்ற சொற்கள் அவை குறிக்கும் பொருள் களில் சிறியனவற்றை உணர்த்துதல் ஈண்டு சிந்திக்கற்பாலது. கணவனை இழந்து தனிமையாக இருக்கும் மகளிர்க்குச் சமுதாயத் தில் ஒரு மதிப்பு இல்லாததால் அவர்கள் கிலைமை கைம்மை என்ற சொல்லால் குறிக்கப்பெற்றுள்ளது போலும். எனவே, பெருமை யில்லாத ஒழுக்கம் கைக்கிளை என்று குறிக்கப்பெற்றது என்க. கைக்கிளை வகைகள் : ஒத்த அன்பில்லாத ஒருத்தியை ஒர் ஆடவன் காதலித்தலும், அது போலவே பெண் ஒருத்தி ஒர்