பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை விளைவிக்கச் செய்யலாம். எனவே, சொல்லி யின்புறுதல்’ என்பதைக் கைக்கிளைக் குறிப்பு என்று கூறினார் ஆசிரியர். கச்சினார்க்கினியர் கருத்து ஆசிரியர் கச்சினார்க்கினியர் ஐக்திணை ஒழுக்கம் நிகழ்வதற்குமுன் காதலன் காதலியை விருப்பம் கொள்ளல், அவனை இவள் இன்னான் என்று துணிதற்குமுன் ஐயுறுதல், பிறகு இன்னான் என்று துணிதல், பின்னர் அவளுக்குக் குறிப்பு உரைத்தல் என்ற நான்கு துறை களையும் கைக்கிளைப் பகுதிகளாகக் கூறுகின்றார். முன்னைய நான்கும் முன்னத்திற்கு என்ப.? என்ற நூற்பாவிற்கு உரை கூறும்போது 'முன்னைய நான்கும்" என்ற பகுதிக்கு அவர் கூறும் உரை இது. இவையும் சிறப்புடைய கைக்கிளை என்பது அவர் கருத்து, இவை நான்கும் தலைவியின் வேட்கைக்குறிப்பைத் தலைவன் அறிவதற்கு முன்னே காதல் மிகுதி பால் தலைவனால் கூறப்பெறுவதால் இவை கைக்கிளையாயிற்று என்பதாக அவர் கூறுவர். ஆசிரியர் இளம்பூரணர் இதற்கு வேறு உரை தருவர். அவர் கருத்துப்படி முன்னைய கான்கும்’ என்பவை: ஏறாமடற்றிறம், இளமை தீராத்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகாத்திறம், மிக்க காமத்தின் மாறாகாத்திறம் இவை கான்கும் பின்னர்க் கூறும் பெருந்திணைக் குறிப்பின் எதிர்மறை. ஏறாத மடல் திறம் என்பது தலைவன் தலைவியை வெளிப்பட இரத்தல். இளமை தீராத்திறம் என்பது, கலம் பாராட்டல். தேறுதல் ஒழிக்த காமத்து மிகாத்திறம் என்பது புனரா விரக்கம். மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பது கயப்புறுத்தல். சிறப்பில்லாத கைக்கிளை இனி, சிறப்பில்லாத கைக்கிளைப் பகுதிகள் யாவை எனப் பார்ப்போம். தமிழ்நாட்டில் முல்லை கிலத்தில் வசிக்கும் ஆயர்கள் ஏறு தழுவிய ஆண்மகனுக்குத் தமது பெண்ணை மணஞ்செய்து கொடுப்பது வழக்கம். கொல்லும் திறனுடைய காளையொன்றனைத் தன் உடல்வலியாலும் உள்ள உறுதயாலும் தன் வயப்படுத்தித் தழுவவல்ல ஆண்மகன் ஒருவனுக்குத் தமது பெண்ணை மணம்செய்துகொடுத்தல் அவர்கள் கசபு. இது சுயம்வரம்’ என்பதனை ஒக்கும். இராமன் சிவன் வில்லை ஒடித்துச் சீதையை மணந்த நிகழ்ச்சியையும், அர்ச்சுனன் வில்லை வளைத்து நாணேற்றி மீன்பொறியை வீழ்த்திப் பாஞ்சாலியை மணந்ததையும் இதன்பாற்படுத்தலாம். இதனை வடநூலார் ஆசுரம்’ என்று குறிப்பிடுவர். ஆசுரமாகிய 2. அகத்தினை- நூற்பா 55