பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கருதிப் பல வகை இடுக்கண்களுக்கிடையிலும் சாமர்த்தியமாகச் செயலாற்றும் திறனுடையவள். தலைவனைக் கண்டவுடன் மயங்கிவிடும் தலைவி போலாது, பல நாளும் தலைவனுடைய குணங்களை ஆராய்க்து தேர்ந்து முடிவில் தலைவியிடம் அவனைக் கட்டுவிப்பாள். எனவே, அகப்பொருள் நூல்களில் காணப்பெறும் இவள் உலகியலறிவு மிக்கவனாகத் திகழ்கின்றாள். தலைவன் தலைவியை விட்டுப் பிரிய கேரிடும் சக்தர்ப்பங்களையெல்லம் கன்கு ஆராய்ந்து, ஒப்பித் தலைவியும் ஒப்புமாறு வற்புறுத்துவாள். தலைவனை விட்டுப் பிரிந்து வருந்தும் தலைவியைப் பலவாறு சொல்லித் தேற்றுவாள். சில சமயம், தலைவனிடம் குறை கண்டால் கழறியுரைத்து அவனைத் திருத்த முயல்வாள். தலைவன் தலைவிய்ரின் கூட்டுறவுகளை கற்றாப், செவிலித்தாபருக்குத் திறம்படவுரைத்து, அவர்களுடைய உடன்பாட்டைப் பேறுவாள். களவு ஒழுக்கத்திலும் சரி, கற்பொழுக்கத்திலும் சரி, இவளுடைய தொடர்பு இல்லாத இடங்களே. 'இல்லை என்று கூறிவிடலாம்: அவ்வளவு முதன்மை பெற்றவள். தோழி தானே செவிலி மகளே' என்ற தொல்காப்பிய நூற்பாவின்படி செவிலித்தாயின் மகளாகக் கருதப்பெறும் இவளுடைய சதுரப்பாடமைக்த பேச்சுகள் அகப் பொருள் பாடல்களின் சுவையை மிகுதிப்படுத்தும் தன்மையன வாக இருக்கும். கற்றாய் : அகப்பொருள் இலக்கியங்களில் வரும் கற்றாய் என்பவள் தலைவியைப் பெற்றெடுத்த தாய். இவள் தன் மகளுடைய கசக்த ஒழுக்கத்தைச் செவியுற்றதும், அவ்வொழுக் கத்தின் போக்கையும் தன் மகள் தேர்ந்தெடுத்த தலைவனுடைய பொருத்தத்தையும் தன் தோழியுடன் (செவிலித் தாயுடன்) ஆராய்ந்து வருவாள். தலைவியின் பிற்கால வாழ்க்கையில் மிகவும் கருத்துடைய இவளைத் தலைவி இன் போக்கிற்கு இடையூறாக இருப்பதாக எண்ணி மனம் வருந்துவாள். தன் மகளது களவொழுக் கத்தைச் செவிலியின் மூலம்தான் இவள் அறிவாள், தலைவியின் கரந்த ஒழுக்கத்தின் விளைவால் அவளுடைய உடலில் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு இவளும் செவிலித்தாயும் வெறியாடும் வேலன், கட்டுவிச்சி முதலியவர்களைக் கொண்டு அவ்வேறுபாடு களின் காரணத்தை ஆராய்வர். இவர்கள் காரணத்தை வெளிப்படை யாக அறிந்துகொண்டாலும் தாம் அதனை அறிந்துகொண்டுவிட்டதாக 10. களவியல்-நூற்பா 35