பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐக்தினை உலக மாந்தர் - 53。 வெளிக்காட்டார்; தலைவியை வெளிப்படையாகக் கடிக் து கொள்ளவும் செய்யார். கடுஞ்சொல் லன்னை என்று தம் மகள் தமக்கிட்டுள்ள பெயர்க்குரிய செயலைக் காட்டார். பாங்கன் : பாங்கன் எனபவன் தலைவனுக்குத் தோழனாக இருப்பவன். தலைவன் களவு ஒழுக்கத்தில் ஒழுகும்போது அவனுக்கு உற்ற துணைவனாக இருந்துகொண்டு அவன் செயல் களில் உதவி புரிபவன். தலைவியைச் சந்தித்து, அவளுடன் மறைந்து ஒழுகும் ஒழுக்கத்தால் அவன் உடலில் காணும் தோற்ற வேறுபாடுகளைக் கண்டு, காரணத்தை வினவியறிந்து, அது முதல் இவனுக்குத் துணைவனாக இருப்பவன். பார்ப்பனப் பாங்கன். வேறு பாங்கன் எனப் பாங்கர் இருவகைப்படுவர் என்பதை அகப் பொருள் நூல்களால் அறியலாம். பரத்தையர் : அகப்பொருள் நூல்களில் பரத்தையர் என்று: கூறப்பெறும் ஒருவகைப் பெண்டிர் உளர். இன்று செல்வர்கள் வாழும் பகுதிகளில் இத்தகையவர் அதிகம் இருப்பது போலவே அன்றும் இருந்திருத்தல் கூடும். இவர்கள் அக்காலத்தில் அறவே இல்லை என்று கூறுவது அவ்வளவு பொருத்தமாகத் தோன்ற வில்லை; இல்லாமல் புலவர்கள் படைத்து மொழிந்தனர் என்று நினைத்தலும் அவ்வளவு சரியல்ல. பரத்தையரைப்பற்றி இளம்பூரணர், "ஆடலும் பாடலும் வல்லராகி, அழகும் இளமையும் காட்டி, இன்பமும் பொருளும் வெஃகி, ஒருவர்மாட்டுக் தங்கா தார்' என்று கூறினாலும், இவர்களில் சிலர் காதற்பரத்தையர் ஆதலையும், அதன்மேல் காமக்கிழததியராக, இற்கிழத்தியராக ஆதலையும் இலக்கியங்களில் காண்கின்றோம். இத்தகைய பரத்தையர்களைத் தொல்காப்பியர் காமக்கிழத்தியர்" என்ற சொல்லால் குறிப்பிடுவர். இவர்களைப்பற்றி இளம்பூரணர் இவ்வாறு குறிப்பிடுவர் : காமக்கிழத்தியராவார் பின்முறை, ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர்: ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப்பட்டாரும் என. ஒத்த கிழித்தியர் - முந்துற்ற மனையாளன்றிக் காமப்பொருளாகப் பின்னுக் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல். இழிந்தாராவார்அந்தணர்க்கு அரசகுலத்தினும் வணிககுலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும், அரசர்க்கு ஏனை இரண்டு குலத் தினும் கொடுக்கப்பட்டாரும் வாணிகர்க்கு வேளாளர் குலத்தில் கொடுக்கப்பட்டாரும். வரையப்பட்டார்-செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர் கன்னியில் வரையப்பட்டாரும் அதன்பின்பு வரையம் 11. கற்பியல்-முகற்பா. 10 - இன் உரை