பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வின் இருவேறு நிலைகள் 59 காந்தருவமாவது, கந்தர்வ குமரரும் அவர் மகளிரும் தம்முள் எதிர்ப் பட்டு மனமியைந்து கூடுதல் போலத் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டு மனமியைக் து கூடுவது. இதனை,

  • அதிர்ப்பில்பைம் பூனாரும் ஆடவரும் தம்மில்

எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப; - கதிர்ப்பொன்யாழ் முந்திருவர் கண்ட முனிவறு தன்காட்சிக் கந்திருவர் கண்ட கலப்பு என்ற வெண்பாவால் உணரலாம். இங்ங்னம் தமிழ் மக்களது களவுப்புணர்ச்சியைக் காந்தருவமாகத் தொல்காப்பியனார் கூறினும், தமிழர்க்கு அவ்வொழுக்கம் ஆரிய மக்களிடத்திருந்து வந்ததென்பது அவர் கருத்தன்று என்பதை நாம் உணர்தல் வேண்டும். இஃது ஒற்றுமையில் வேற்றுமை காண்டற்கே தமிழ் கூறு கல்லுலகத்து வழக்கும் செய்யுளுமே ஓதிய ஆசிரியரால் கூறப்பெற்றதாகும். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐக்தினை மருங்கின் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை கல்யாழ்த் துணைமையோர் இயல்பே' என்ற தொல்காப்பியனாரின் நூற்ப மேற்கூறிய கருத்துகளைத் தெளிவாகப் புலனாக்கும். சிந்தாமணி ஆசிரியரும் இது தமிழ் வழக்கே என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இலைபுறங் கண்ட கண்ணி யீன்றமிழ் இயற்கை இன்பம்' தேவர் பண்ணிய தீக்தொடை இன்சுவை மேவர் தென்றமிழ் மெய்ப்பொருள் ஆதலின் 8 என்ற அவரது கூற்றுகளால் இதனை நன்கு அறியலாம். ஒருவனும் ஒருத்தியுமாக எதிர்ப்பட்டார் இருவர், புனலொடு புல் சாய்ந்தாற்போலத் தம் தலைமைக் குணங்களை இழந்து, மெய்யுறு புணர்ச்சியிற்கூடி மகிழும் இயல்பே கந்தர்வ மணம் 3. களவியல் - நூற்பா. 1. 4. சுரமஞ்சரி - 9. 5. பதுமை - 163.