பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இயற்கைப் புணர்ச்சி இவ்வுலகிலுள்ள பொருள்களை உயிர்ப்பொருள்கள், உயிரில் பொருள்கள் என இரு கூறிட்டுப் பேசலாம். உயிர்ப் பொருள்களின் கலத்தின் பொருட்டே உயிரில் பொருள்கள் படைக் கப்பெற்றுள்ளன. தன் துன்பத்தை உணர்ந்து வருந்துவதும், தன் இன்பத்தை உணர்ந்து களிப்பதும் எல்லா உயிர்க்கும் பொதுவான இயல்பு. ஆனால், மக்கள் வாழ்க்கையின் தனிச் சிறப்பு அதில், பகுத்தறிவு விளக்கம் அமைந்திருப்பதும், இன்பத்தை அவாவி கிற்றலுமேயாகும். அறிவு விளங்கப் பெறுவதெல்லாம், அறியாமை வாயிலாக வரும் துன்பங்களை நீக்கி, இன்பத்தை துகாதற் பொருட்டே நிகழ்கின்றது எனபது உய்த்துணர்தற்பாலது. இதனையுணர்ந்த தொல்காப்பியனார், எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான்அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்' என்று கூறியுள்ளார். இங்ங்னமே, பிற்காலத்தார் உறுதிப் பொருள்களை அறம், பொருள், இன்பம் எனப் பாகுபடுத்தோதியது. போலாது அவர், 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங் (கு) அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்’ என ஒதியவாற்றானும் இதனை நன்கு அறியலாம். இக்கருத் தினை அ டி ப ப ைட ய க க் கொண்டுதான் திருக்குறன் அல்லது வாழ்க்கை விளக்கம்' என்ற நூலின் ஆசிரியர் நூற். பொருளைத் திருக்குறளில் காணப்பெறுவதுபோல் அறம், பொருள், இன்பம் எனப் பகுத்தோதாது இன்பம், பொருள், அறம் 1. பொருளியல் - நூற்பா 27 (இளம்). 2. களவியல் - நூற்பா (இளம்). 3. டாக்டர் மு. வரதராசனார். திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம், -