பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

アG - தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை எனப் பகுத்தோதினர் போலும் ! இத்தகைய இன்பத்திற்கு அடிப் படையாக உள்ள இல்வாழ்க்கை கணவன் மனைவியரிடையே உள்ள மிக உயர்ந்த பேரன்பின் வழித்தாக நடைபெறுவதாகும் என்பதும், அப்பேரன்புதான் காதல்’ என்னும் பெயரால் வழங்கப் பெறுகின்றது என்பதும் காம் அறிவோம். இதனைப் பரிபாடலும், கரதற் காமம் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி.சி என்று குறிப்பிடுகின்றது. அன்பின் ஐந்தினைக்குரியதாய இக்காதல் உணர்ச்சிதான் இன்பத்திற்கு அடிப்படையாக இருப்பது. இந்த இன்பவாழ்வின் இருவேறு நிலைகளைத்தான் களவு என்றும் "கற்பு’ என்றும் பண்டையோர் வகைப்படுத்தி, அவற்றிற்கு வரை யறையும் வகுத்துள்ளனர் என்பதை முன்னர்க் கண்டோம். இத் தகைய உணர்ச்சியைச் சிறந்த முறையில் படைத்துக் காட்டும் இன்ப வாழ்வில் முதன் முதலாக நடைபெறுவது இயற்கைப் புணர்ச்சி, அஃதாவது, தலைவனும் தலைவியும் ஊழ்வலிபால் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்வது. இதனை இலக்கண நூல்கள் எதிர்ப்பாடு என்றும் குறிப்பிடும். இந்த இயற்கைப் புணர்ச்சியை இலக்கண நூலார் காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என்று கான்கு வகையாகப் பகுத்துப் பேசுவர். இவ்வாறு கூறும் ஒருசில மரபுகளை ஈண்டுக் காண்போம். சிறந்த கைக்கிளை : மூன்று விதமான கைக்கிளைகளை நாம் அறிவோம். முதலாவது, காமஞ்சாலா இளமையோளிடம் நிகழ்வது: அஃதாவது, காமக்குறிப்பிற்குப் பொருந்தாத பேதைப் பருவத்துப் பெண் ஒருத்தியிடம் ஒரு தலைவன் தன் காதற்குறிப்புத் தோன்றக் கூறுவது. இரண்டாவது, ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தி யும் ஊழ்வசத்தால் தம்முள் எதிர்ப்பட்டுக் கூடும் இயற்கைப் புணர்ச்சிக்கு முன் தலைவனிடம் பெரும்படின்மை நிகழும் காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என்ற நான்கு நிலைகளுமாகும். மூன்றாவது, வேதத்தே கூறப்பெற்ற எண்வகை மணங்களுள் கொல் லேறு கோடல், வில்லேற்றுதல் முதலியன செய்துகொள்ளும் ஆசுர மும், தலைமகளாலும் அவள் தமராலும் பெறாது வலிதிற் கொள்ளும் இராக்கதமும், மூத்தோர்களித்தோர் முதலியோரிடம் கூடு தலாகிய பைசாசமும் ஆகும். இவற்றுள் செய்யுள் வழக்கிற்குப் பெரி தும் சிறப்புடையது இரண்டாவது வகைக் கைக்கிளையாகும். தமி 4. பரிபாடல் - 9அடி (13, 14). 5. இயல் - 7