பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?2 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை சிந்தாமணி ஆசிரியரின் விளக்கம் : மேற்குறிப்பிட்ட காட்சி முதலிய கான்கு கிலைகளைச் சிந்தாமணி ஆசிரியர் விளக்குவதைக் காண்போம். விடக் தீண்டப்பெற்ற பதுமையின் மயக்கத்தைச் சீவகன் தெளிவித்ததும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள் கின்றனர்; உள்ளப்புணர்ச்சி ஏற்படுகின்றது. இருவரும் வேட்கை நோயால் வெந்துருகுகின்றனர். தமிழ் முறைக்கேற்ப மீட்டும் இவர் களைச் சோலையில் சந்திக்க வைக்கின்றார் ஆசிரியர் : இருவர் வாவும் ஒருவரொருவர்க்குத் தெரியாமலே நிகழ்வதாகக் காட்டு கின்றார். மாதவிப்பந்தர் அருகே ஆயத்தை விட்டு அகன்று, தனியே நின்றுகொண்டிருக்கும் பதுமையைச் சீவகன் காண்கின் தான். இது காட்சி, கறந்த பாலினுட் காசில் திருமணி கிறம்கி ளர்ந்துதன் கீர்மைகெட் டாங்கவன் மறைந்த மாதவி மாமை கிழற்றலின் சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கனான். 9 (காசு - குற்றம் , திருமணி - அழகிய நீலமணி ; கிளர்ந்து - கிளர கெட்டாங்கு - கெட்டாற்போல ; மாமை - மாமை திறம் : மாதவி . மாதவிப்பூ.} குறைவின்றி நிறைந்த ஆண் தன்மையும் பெண் தன்மையும் தூண்டுதலினால் ஒப்புயர்வில்லாத் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காண்டலையே காட்சி என்பர். இவ்வாறு ஒத்த அன்புடைய தலைவன் தலைவியர் ஒருவரை யொருவர் காண்பது ஊழவலியினால் என்பது பண்டையோத் கருத்து. அன்பு முதலியவற்றால் தலைவன் மிக்கவனாயினும் குற்றமில்லை. இச்செய்தியைத் தொல்காப்பியர், ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோ னாயினும் கடிவரை இன்றே.12 8. சீவகசிங் 1304 - 1515 ; 9. ை- செப். 1316 - 1322. 10. ை- செப். 13:25, 1 . ஆனால் யாதானும் ஒன்றினாயினும் தலைமகள் மிக்காளாயின் கடியப்படும்" என்பர் இளம்பூரணர். 12. கிளவியல் - நூற்பா 2 (இளம்).