பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துகளால் தாக்கம் பெற்று நன்னூல் உருவானதை ஒரு பகுதியாக ஆராய்கிறது. அதில் தொல்காப்பியத்துக்கும் நன்னூலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை விளக்கப்பட்டுள்ளது. பேரா. சி. &LISTuosoflu’s soliGaul—set A Critical Study of Tholkappiyam (Eluttu and Col) and Nannul (BrsfrGamesl) 1977) Quonysustuu, கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கியுள்ளது. எல்லாத் தமிழ் இலக்கணங்களின் எழுத்ததிகாரக் கோட்பாட்டை மொழியியல் நோக்கில் விளக்கும் நூல் எழுத்திலக்கணக் கோட்பாடு (செ.வை. சண்முகம், 1980).

தமிழிலுள்ள எல்லா இலக்கண நூல்கள் கருத்துகளையும் தலைப்பு வாரியாகத் தொகுத்து பேரா. ச.வே. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள இலக்கணத் தொகை என்ற பொதுத் தலைப்பில் எழுத்து (1967) சொல் (1971) என்று இரண்டு நூலும் பேரா. அ. சிவலிங்கனாரின் தொல்காப்பிய உரைவளங்களும் (1980 முதல்) வெளிவர இந்த நூல் தூண்டுகோலாகவும் முன்னோடியாகவும் இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இன்று இலக்கண ஆய்வு என்பது வரலாற்று ஆய்வு, இலக்கணக் கோட்பாட்டு ஆய்வு, இலக்கணச் சமூகவியல் ஆய்வு, இலக்கண ஒப்பாய்வு (பிற மொழி இலக்கணங்களை ஒப்பிட்டு ஆராய்தல்), இலக்கண உருவாக்கம் என்று பன்முகப்படுத்தப்பட்டிருக்கிறது.

வெறும் பாட நூலாக இல்லாமல் இலக்கண ஆய்வு நூலாக அமைந்த பெருமையை உடையது இது. கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வால் இந்த நூலில் கூறியுள்ள சில கருத்துகள் இன்று ஏலாதவையாக இருக்கின்றன. இவை ஆய்வின் வளர்ச்சியால் ஏற்பட்டவை. இந்த நிலை எல்லா நூலுக்கும் பொருந்தும். ஆனாலும் இந்த நூலைப் படிக்கும் மாணவர்கள் தொல்காப்பியம், நன்னூல் பற்றித் தெளிவான அறிவு பெற்று இலக்கண ஆய்வில் ஈடுபடும்படியான தூண்டுதல் பெறுவார்கள் என்பது உறுதி.

மாரியப்பாநகர்

செ.வை. சண்முகம் 30-7–2001