உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தொல்காப்பியம்-நன்னூல்



       சாவ வென்னுஞ் செயவென் னெச்சத் 
       திறுதி வகரங் கெடுதலு முரித்தே.     (தொல்.209)

எனவும்,

      வாழிய வென்னுஞ் செயவென் கிளவி 
      யிறுதி பகரங் கெடுதலு முரித்தே. (தொல்.211) 

எனவும் வரும் சூத்திரங்களாலுணர்த்தினார் தொல் காப்பியனார். இவ்விரு சொற்களிலும் இறுதி யுயிர்மெய் கெடுதலை,

     சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி. (நன்.169) 
     வாழிய வென்பத னிற்றி னுயிர்மெய் 
     ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே. (நன்.158) 

எனவரும் சூத்திரங்களாலுணர்த்தினார் நன்னூலார்.

   இகரவீற்றுள், நாழி என்ற அளவுப்பெயர் முன்னர் உரி யென்பது வருமொழியாய் வருங்காலத்து, நாழி என்னுஞ் சொல்லிறுதி யிகரம், தான் ஏறிய ழகர மெய்யொடுங்கெட்டு அவ்விடத்து டகார ஒற்றுப் பெற்று முடியும் இதனை,
       உளிவரு காலை நாழிக் கிளவி 
       இறுதி யிகரம் மெய்யொடுங் கெடுமே 
       டகரம் ஒற்றும் ஆவயி னான. (தொல்.240) 

என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார்.

     (உ-ம்) நாழி+உரி = நாடுரி எனவரும். 
     மேற்கூறிய திரிபோடு உரியென்னுஞ் சொல் நிலை மொழி யாய் நின்று ஏற்ற பிற பெயரோடு புணருமிடத்து யகர வுயிர் மெய்யும் பெறும் என்பதனையும்,
     உரிவளி னாழியி னிற்றுயிர் மெய்கெட 
     மருவும் டகரம் உரியின் வழியே 
     யகர வுயிர்மெய்யாம் ஏற்பன வரினே, (நன்.174) 

என்ற சூத்திரத்தினாற் கூறினார் நன்னூலார்.

   உகரவீற்றுள் அம்சாரியை பெறுவனவற்றுள் செரு என்ப தன்முன் வரும் அம்சாரியையின் மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்குமுடியும். இதனை,

எருவும் செருவும்........... .............................