இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புள்ளி மயங்கியல் 189
தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (தொல்,376) தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (தொல்.401)
எனவரும் சூத்திரங்களால் முறையே ந, ண, ம, ல, ள என்னும் ஐவகைப் புள்ளியீற்றுத் தொழிற் பெயர்க்கண்ணும் மாட்டெறிந்து முடித்தார்.
வேற்றுமைக் குக்கெட அகரம் நிலையும் (தோல்.299)
என்பதனால், நகர வீற்றுத் தொழிற்பெயர் வேற்றமைக் கண் உகரம் பெறாது அகரம் நிலைபெற்று முடியும் என்றார்.
(உ-ம்) அல்வழி
உரிஞ் + கடிது = உரினுக்கடிது. பொருந் + ‘ = பொருநுக்கடிது. மண் + “ = மண்ணுக்கடிது. தும் + ‘ = தும்முக்கடிது. புல் + ‘ = புல்லுக்கடிது. துள் + = துள்ளுக்கடிது.
ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது.
வேற்றுமை
உரிஞ் + கடுமை = உரினுக்கடுமை. பொருந் + = பொருநக்கடுமை. மண் + = மண்ணுக்கடுமை. தும் + = தும்முக்கடுமை, புல் + = புல்லுக்கடுமை. துள் + = துள்ளுக்கடுமை.
ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை எனவரும்.
ஞணநமலள என்னும் ஈற்றுத் தொழிற்பெயர்களுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இவ்விதிகளை இவற்றுடன் வகர னகர ஈற்றுத் தொழிற்பெயர்களுக்கும் இவ்வீறுகளின் ஏவல் வினைகளுக்கும் இயைத்துரைப்பர் நன்னூலார்.
ஞணநம லவளன. வொற்றிறு தொழிற்பெயர் ஏவல் வினைநனி யவ்வல் மெய்வரின் உவ்வுறும், ஏவல் உறாசில சில்வழி. (நன்.207)
நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை. (நன்.208)