உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தொல்காப்பியம்-நன்னூல்



   எனவரும் நன்னூற் சூத்திரங்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கனவாகும்.
     ஈமுங் கம்மும் உருமென் கிளவியும்
    ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன. - (தொல்,328) 
    மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் 
    அந்நாற் சொல்லுந் தொழிற்பெய ரியல. (தொல்.345) 
    வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. (தொல்,373) 
    ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. (தொல்,382, 
    புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. (தொல். 403,

எனவரும் தொல்காப்பியச் சூத்திரங்கள், ஈம், கம், உரும், மின், பின், பன், கன், வல், தெவ், புள், வள் எனவரும் மெய்யீற்றுச் சொற்கள் தொழிற்பெயர்போல அல்வழி வேற்றுமையாகிய இருவழியும் உகரம் பெற்று முடிவன என உணர்த்துகின்றன. இவற்றுள் கன் என்னுஞ் சொல் வேற்றுமைக்கண் வருமாயின் மரமல்லாத எகின் என்னுஞ் சொல் நிலைமொழிக்கண் அகரம் பெற்று வல்லெழுத்து மிக்கு முடிதல் போன்று அகரமும், வல்லெழுத்தும் பெற்று முடியும். இம்முடிபு.

       ஏனை எகினே அகரம் வருமே 
       வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். (தொல்,337) 
       வேற்றுமை யாயின் ஏனை யெகினொடு 
       தோற்ற மொக்கும் கன்னென் கிளவி. (தொல்,346) 

எனவரும் சூத்திரங்களாற் குறிக்கப்பட்டது.

   வல் என்ற சோல்லின் முன் நாள், பலகை என்பன வருமொழியாய்வரின் அவ்விடத்து விதிக்கப்பட்ட உகரம் கெடுதலும் உண்டு எனவும், அவ்வழி அகரம் வந்து நிலைபெறும் எனவும் கூறுவர் தொல்காப்பியர்.
     நாயும் பலகையும் வரூஉங் காலை 
     ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே 
     உகரங் கெடுவழி அகர நிலையும், (தொல்,374) 

என்பது தொல்காப்பியம்.

(உ-ம்) ஈம் கடிது = ஈமுக்கடிது,

         கம்    “    “    “    கம்முக்கடிது,
         உரும் “    “    “    உருமுக்கடிது,
         மின்  “    “    “    மின்னுக்கடிது,