இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
222
தொல்காப்பியம்-நன்னூல்
தோற்றம்’ என்றதனால் யாடு ஞாற்சி = யாட்டுஞாற்சி முயிறு ஞாற்சி = முயிற்றுஞாற்சி, மாட்சி, யாப்பு, வன்மை, அடைவு என ஏனைக்கணத்தும் இவ்விரு தொடரின்கண்ணும் ஒற்றிரட்டித்தல் கொள்க.
இங்ஙனம் இவ் விருமொழிக்கண்ணும் நின்று இரட்டுவன டகர, றகர வொற்றுக்களே யென்பதனை
நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. (நன்.183)
என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார் நன்னூலார்.
ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. (தொல்.442)
இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.
முற்கூறிய விருதொடர்களுள் இனவொற்று இடையே மிக்குமுடியாத மொழிகளுமுள அப்பகுதியுள் வருமொழி வல்லொற்று மிக்கு முடிதலில்லை எறு.
முற்கூறிய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றுகரங் களுள் டகர றகர மல்லாத கு, சு, து, பு என்னும் நான்கீற்று மொழிகளும் இனவொற்று மிகாதனவாம்: அஃதாவது ஒற்றிரட்டாதனவாம்.
நாகுகால் - செவி, தலை, புறம் எனவும் வரகுகால் - சின்ை, தாள், பதர் எனவும் வரும்.
அத்திறம்’ என்றதனால் உருபிற்கு எய்திய சாரியை பொருட்கு எய்திய வழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க என்பர் உரையாசிரியர்.
இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் நடைஆ இயல என்மனார் புலவர். (தொல்.413)
இஃது இடைநின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது.
(இ-ள்) இடையொற்றுத் தொடர்க்குற்றியலுகரமும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகரமும் முற்கூறிய இயல்பு முடிபினை யுடையவென்று கூறுவர் புலவர் (எறு) (உ-ம்) தெள்கு கால், சிறை, தலை, புறம் எனவும் எஃகுகடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். மேற்குத்திரத்தும் இச்சூத்திரத்தும் கூறிய இயல்பு முடிவினை நன்னூலார்,